தெற்கில் கடும் மழை; வடக்கில் கடும் வரட்சி | தினகரன் வாரமஞ்சரி

தெற்கில் கடும் மழை; வடக்கில் கடும் வரட்சி

தெற்கில் பெய்து வரும் கடும் மழை காரணமாக சில பகுதிகளில் மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ள அதே வேளை வடக்கில் கடும் வரட்சியினால் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் அதிக மழை காரணமாக இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அச்சுறுத்தல் இருப்பதால் அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும்

கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் மண்சரிவு தொடர்பில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே ​வேளை குகுலே கங்கையின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குகுலே கங்கைக்கு அருகில் தாழ்நிலப் பகுயில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

புளத்சிங்கள மற்றும் களுத்துறை பிரதேசங்களிலுள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மத்திய மற்றும் களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லி மீற்றர் வரை மழை எதிர்பார்ப்பதாகவும் காலநிலை அவாதான நிலையம் அறிவித்துள்ளது.

இதே ​வேளை மழை வீழ்ச்சி இன்றி மன்னார் ,வவுனியா,முல்லைதீவு ,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,குருணாநாகல்,புத்தளம், அநுராதபுரம் போன்ற மாவட்டங்கள் தொடர்ந்து வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டங்களில் 3,69,404 குடும்பங்களை சேர்ந்த 12,72,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

யாழில் 128,656 பேரும் முல்லைதீவில் 115,308 பேரும்,வவுனியாவில் 101,920 பேரும், குருணாநகலில் 231,121 பேரும், புத்தளத்தில் 164,463 பேரும், மட்டக்களப்பில் 65,451 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.குளங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு்ள்ளதோடு விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.(பா) 

Comments