கடலோர மாவட்டங்களில் டெங்கு பெருந்தாக்கம் | தினகரன் வாரமஞ்சரி

கடலோர மாவட்டங்களில் டெங்கு பெருந்தாக்கம்

லோரன்ஸ் செல்வநாயகம்

 

வடக்கு, கிழக்கு, தெற்கு என 13 கடலோரத்தை அண்டிய மாவட்டங்களில் கடற்கரைகளில் குவியும் பிளாஸ்டிக், பொலித்தீன், போத்தல் உள்ளிட்ட கழிவுகளாலேயே டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

நாட்டில் 80 வீதமான வீடுகளில் இன்னும் விறகு உபயோகப்படுத்தப்பட்டு வருவதால் அடுப்பு பற்றவைக்க உபயோகிக்கும் ‘சொப்பிங் பேக்’ காரணமாக புற்றுநோய், இருதயநோய் உட்பட ஒன்பது முக்கிய நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக அமைச்சின் பொது சுகாதாரப் பிரிவு பணிப்பாளரும் விசேட நிபுணருமான டாக்டர் இனோகா சுரவீர எச்சரித்துள்ளார்.

1,25,000 பேர் தற்போது டெங்கு நோயாளிகளாக உள்ளதுடன் எதிர்வரும் வாரங்களில் ஏற்படும் காலநிலை மாற்றம் இதனை மேலும்

அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு நோய்கள் பாதிப்பிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமெனவும் அவர் அறிவுறுத்தினார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் விழிப்புணர்வு அவசியம் என்றும் ஊடகங்கள் அதற்கான பங்களிப்புகளை மேற்கொள்ள முடியும் என்ற அறிவுத்தலையும் அவர் இதன்போது விடுத்தார். (ஸ) 

Comments