நான்காவது Asia Pacific Choir Games மற்றும் Grand Prix of Nations -Colombo நிகழ்வு | தினகரன் வாரமஞ்சரி

நான்காவது Asia Pacific Choir Games மற்றும் Grand Prix of Nations -Colombo நிகழ்வு

2017 ஒக்டோபர் 21 முதல் 28 திகதி வரை கொழும்பு நகரில் இடம்பெறவுள்ள Asia Pacific Choir Games மற்றும் Grand Prix of Nations நிகழ்வுகள் மூலமாக ஒருவார கலாசார இசைப்போட்டிகள், சிநேகபூர்வ இசை நிகழ்வுகள் மற்றும் விமரிசையான கொண்டாட்ட இசை நிகழ்வுகள் என கலாசார இசை (Choir) ரசிகர்களுக்கு தனித்துவமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான சர்வதேச பங்கேற்பாளர்கள, வழிநடத்துனர்கள், பார்வையாளர்கள் நிகழ்விற்கு வருகை தரவுள்ளதுடன், இலங்கையின் கலாசார சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்கு ஒரு நற்செய்தியாகவும் இது அமைந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவின் கீழ் Colombo Cultural Hub Trust அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதுடன், இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகம் மற்றும் சர்வதேச கலாசார இசைப் போட்டிகள் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான உலகின் முன்னணி அமைப்பான ஜேர்மனி நாட்டின் INTERKULTAR ஆகியன இதனை கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் காணல் மற்றும் இயற் கலைகளை வளர்த்து, தெற்காசிய கலாசாரமையமாக கொழும்பினை விருத்தி செய்யும் நோக்குடன், ஒரு பொதுதனியார் பங்குடமையின் கீழ் Colombo Cultural Hub Trust ஸ்தாபிக்கப்பட்டது. ஓர்அறப்பணி மன்றமாக ஸ்தாபிக்கப்பட்ட Colombo Cultural Hub Trust (CCHT) இன் நோக்கங்கள் வருமாறு:
உள்நாட்டுகலை மற்றும் கலாசாரத்தை வளர்த்து, அபிவிருத்தி செய்தல் இலங்கை மக்கள் மத்தியில் சர்வதேச கலை மற்றும் கலாசாரத்தை ஊக்குவித்தல் உள்நாட்டு மற்றும் சர்வதேச கலை மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றும் உள்நாட்டு கலைஞர்களை வளர்த்தல் கொழும்பினை தெற்காசியாவின் கலாசாரமையமாக மாற்றுவதை சர்வதேச ரீதியாக ஊக்குவித்து, வெளிக்காண்பித்தல் இந்த அறப்பணி மன்றத்தின் தர்மகர்த்தா சபைத் தலைவராகவும், முகாமைத்துவ நிர்வாகியாகவும் மனோ ஷண்முகம் சேவையாற்றுவதுடன், நிறைவேற்று சபையில் நியோமல் டி அல்விஸ், செளந்தரி டேவிட் ரொட்ரிகோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். லயனல் பெர்னாண்டோ, பேராசிரியர் சந்ரகுப்தா தெனுவர, பேராசிரியர் சரத் அமுனுக மற்றும் பேராசிரியர் பிரிஷாந்த குணவர்தன ஆகியோரும் சபையின் அங்கத்தவர்களாக உள்ளனர். 

Comments