இலங்கை- – இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து சில குறிப்புகள் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை- – இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து சில குறிப்புகள்

* இத் தொடர் வெற்றி கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி பெறும் 8வது தொடர் வெற்றியாகும். 2015ம் ஆண்டு முதல் இலங்கை. தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, கடைசியாக இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று தொடராக 8 தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளது. இது அவுஸ்திரேலிய அணி ரிக்கி பொன்டிங்கின் தலைமையில் பெற்ற 9 தொடர் வெற்றிகளுக்கு பின் அடுத்த கூடிய தொடர் வெற்றிகளாகும்.

* இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் முழுமையாகத் தொடரை வெல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதே வேளை இலங்கை அணி இந்திய அணியிடம் முழுமையாக தொடரை இழப்பது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும். 1994ம் ஆண்டு இலங்கை அணி இந்திய சுற்றுப்.பயணத்தின் போது 3-0 என்ற ரீதியில் முழுமையாகத் தொடரை இழந்திருந்தது.

* இலங்கை ,அணியின் 35 வருடகால டெஸ்ட் வரலாற்றில் தொடரை பூரணமாக இழந்த 6வது சநதர்ப்பம் இதுவாகும். இலங்கை மண்ணில் இது இரண்டாவது பூரண தொடர் தோல்வியாகும். இதற்கு முன் 2003ம் ஆண்டு ஆவுஸ்திரேலிய அணியிடம் இவ்வாறு தொடரை இழந்திருந்தது.

* இத்தொடரின் போது இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 50 போட்டிகளில் 279 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலிய வீரர் டெனிஸ் லிலி 50 போட்டிகளில் 262 வீழ்த்தியிருந்த சாதனையை முறியடித்தார்.

* 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா குறைந்த போடடிகளில் 150 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவர் 32 போட்டிகளில் இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

* இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராகுல் டெஸ்ட் போடடிகளில் தொடராக ஏழு அரைச்சதங்களை விளாசி இலங்கை வீரர் குமார் சங்கக்கார, சிம்பாப்வேயின் அன்டி பிளவர், மேற்கிந்தியாவின் சிவ்நரின் சந்தர்போல் ஆகியோரின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

* இலங்கை மண்ணில் தொடர்ச்சியாக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2015ம் ஆண்டு 3 போட்டிகள் கொண்ட தொடரில் காலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தது. அதன் பின் கொழும்பில் நடைபெற்ற இரு போட்டிகளிலும், இம்முறை தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

* இந்திய அணி வெற்றி பெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸில் சதமடித்த வீரர்களின் இலகுவான பிடிகளை தவறவிட்டிருந்தனர். முதலாவது போட்டியில் தவானின் இலகுவான பிடியை விட்டதால் அவர் 190 ஓட்டங்கள் பெற்றார். இரண்டாவது போட்டியில் ரஹானே கொடுத்த பிடியைத் தவறவிட்டதால் அவரும் சதமடித்திருந்தார். பல்லேகலயில் நடைபெற்ற 3வது போட்டியிலும் 1 ஓட்டம் பெற்றிருந்த போது தவான் கொடுத்து இலகுவான பிடியை தவறவிட்டதால் மீண்டும் அவர் சதமடித்தார்.

* இலங்கை-இந்திய அணிகள் மோதிய 3வது போட்டியில் ஹர்திக் பாண்டியா இலங்கை சுழற்பந்து விச்சாளர் புஷ்பகுமார வீசிய ஒரு ஓவரில் 26 ஓட்டங்களை பெற்றார். டெஸ்ட்போட்டி வரலாற்றில் ஒரு ஓவருக்குப் பெறப்பட்ட கூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

* இத் தொடரில் இந்திய அணி துடுப்பொடுத்தாடிய நான்கு இன்னிங்ஸ்களில் ஏழு சதங்கள் பெறப்படடுள்ள அதேவேளையில் இலங்கை விளையாடிய 6 இன்னிங்ஸ்களிலும் 2 சதங்களே பெறப்பட்டன. இத் தொடரில் இந்திய அணியின் 32 விக்கெட்டுககள் வீழ்த்தப்பட்துடன் இலங்கை அணயின் 57 விக்கெட்டுகள் வீழத்தப்பட்டுள்ளன. 

Comments