உயர்தரப் பரீட்சை மோசடி மாணவனுக்கு வாழ்நாள் தடை | தினகரன் வாரமஞ்சரி

உயர்தரப் பரீட்சை மோசடி மாணவனுக்கு வாழ்நாள் தடை

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட மாணவனுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் முக்கிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற இந்த மாணவன் உள்ளிட்ட ஐந்து பேர் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதி நவீன இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மோசடி செய்த மாணவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். இதன்படி, இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தும் எந்தவொரு பரீட்சையிலும்குறித்த மாணவர் தோற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் சாதனங்களை வைத்திருந்து பிடிபடும் மாணவ மாணவியருக்கு பொதுவாகஐந்தாண்டு தண்டனையே விதிக்கப்படுவது வழமையானதாகும்.

எனினும் குறித்த மாணவரின் செயற்பாடு பாரதூரமானது என்ற காரணத்தினால் தண்டனைகடுமையாக விதிக்கப்படுகின்றது என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்குமார தெரிவித்துள்ளார்.

 

Comments