சூழலுக்கு பாதிப்பற்ற சீலிங் தகடுகளை அறிமுகப்படுத்தியுள்ள EL TORO நிறுவனம் | தினகரன் வாரமஞ்சரி

சூழலுக்கு பாதிப்பற்ற சீலிங் தகடுகளை அறிமுகப்படுத்தியுள்ள EL TORO நிறுவனம்

இலங்கையில் முதன் முறையாக உற்பத்தி செய்யப்படும் சூழலுக்கு பாதிப்பற்ற சீலிங் தகடுகளை EL TORO Roofing Products Ltd நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வறிமுக நிகழ்வு அண்மையில் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. நாட்டின் மிகச்சிறந்த கூட்டு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் St. Anthony’s குழுமத்தின் அங்கமான EL TORO Roofing, சூழலைப் பாதிக்காத மூலப்பொருட்களை பயன்படுத்தி உயர்தரம் கொண்ட சீலிங் தகடுகள் மற்றும் துணை உற்பத்திகளை தயாரித்து வருகின்றது.

அண்மைய காலங்களில் நிர்மாணத்துறையைப் பொறுத்தவரையில் பசுமை என்ற எண்ணக்கரு பயன்பாடு தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளதுடன், சூழலுக்கு தீங்கிழைக்காத வசிப்பிட சூழலை மக்கள் நாடுவது மென்மேலும் அதிகரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சூழலுக்கு தீங்கிழைக்காத வகையில் நிர்மாணிக்கப்படும் வசிப்பிடங்களுக்கு அதிகரித்துள்ள கேள்வி ஆகியவற்றிற்கு அமைவாக, தனித்துவமான சீலிங் தகடு உற்பத்திகளை EL TORO அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சீலிங் தகடுகளாகவும் இவை உள்ளன.

செலுலோசு நார், சுத்திகரிக்கப்பட்ட போர்ட்லன்ட் சீமெந்து மற்றும் தண்ணீர் ஆகிய மூலப்பொருட்களைக் கொண்ட ஒரு விசேட நார்ச் சீமெந்து கலவையைப் பயன்படுத்தி EL TORO சீலிங் தகடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகச்சிறந்த ஜேர்மனிய தொழில்நுட்பத்தை உபயோகித்து வருகின்ற EL TORO, தனது அதி நவீன உற்பத்தி இயந்திரத் தொகுதியை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றது. ஜேர்மனிய தொழில்நுட்பத்தை உள்ளிணைத்து, சூழலுக்கு தீங்கிழைக்காத மூலப்பொருட்களை உபயோகித்து தயாரிக்கப்படுகின்ற சீலிங் தகடுகள், தரம், நீடித்த உழைப்பு, உறுதி, இலகுவாக கையாளக்கூடியமை மற்றும் பரிமாண அளவில் நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்கின்றன.

EL TORO Roofing Products Ltd நிறுவனத்தின் தலைமைத் தொழிற்பாட்டு அதிகாரி மனோஜ் வீரமன் இவ்வைபவத்தில் உரையாற்றுகையில், பசுமையான வசிப்பிட சூழலை நாடுகின்றவர்களுக்கு, பசுமையான தொழில்நுட்பத்தின் மூலமாக, பசுமையான உற்பத்திகளை விநியோகிக்கும், பசுமை எண்ணக்கருவை நாம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார். 

Comments