வில்பத்து சரணாலயம் சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் திறப்பு | தினகரன் வாரமஞ்சரி

வில்பத்து சரணாலயம் சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் திறப்பு

கடும் வரட்சி காரணமாக கடந்த ஒன்றரை மாத காலமாக மூடப்பட்டிருந்த வில்பத்து தேசிய சரணாலயம் நேற்று (09) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. வில்பத்து தேசிய சரணாலயத்தின் பொறுப்பாளர் லக்ஸ்மன் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

கடும் வரட்சி காரணமாக வில்பத்து தேசிய சரணாலயத்தில் இருந்த சில குட்டைகள் கடந்த காலங்களில் வற்றிப் போயிருந்தன.

இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் வில்பத்து தேசிய சரணாலயம் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டிருந்ததாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் வில்பத்து வனப்பிரதேசங்களில் நிலவும் அதிக மழையுடனான காலநிலையையடுத்து அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனையடுத்தே துறைசார் அமைச்சும், வனவிலங்கு அமைச்சும் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் சரணாலயத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Comments