மேலும் அழுதான் | தினகரன் வாரமஞ்சரி

மேலும் அழுதான்

- கிண்ணியா

மஜீத் ராவுத்தர்... -

இரவு நடுநிசிக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருந்தது. கிண்ணியா துறையடி சுற்றிவர நேரம் தாமதித்திருக்குமா? இந்த பஸ் போனால் இனி நாளைக்குத்தான் பயணம். நாளை புறப்படும் ‘பிளைட்’ கிண்ணியா பஸ் வரும்வரை சவூதி செல்ல காத்திருக்குமா? எல்லாம் அவசரம் அவசரம்.

பரபரப்பாக வெளிக்கிட்டு விட்டார்கள் தந்தை பதூரும் மகள் மகிசாவும் கொழும்பு சென்று அங்கிருந்து எயார்போட்டுக்கு செல்லும் பஸ்ஸில் நல்ல கிரவுட் மகளை ஒருவாறு படாது பாடுபட்டு ஒரு சீமாட்டி நெருக்கிக் கொடுத்த சீட்டில் அமர்த்திவிட்டு தந்தை பதூர் கரண்டுக் கம்பியில் தொங்கிய வௌவ்வால் போல தொங்கி வந்தவனுக்கு தூக்க கலக்கம் வேறு தன்னோடு முட்டிமோதும் முன்னும் பின்னும் ஆட்கள்.

பஸ் பிறேக் போட்டு ‘எயார்போட் ஹந்தி வகின்ட’ கென்டக்டர் பதூர் பின்னால் சுtம்மா வெறுங்கையோடு பேசிக் கொண்டு நின்றவன் சிறு கைப்பையுடன் அவசர அவசரமாக இறங்கி ஓடியதை கண்ட பதூர் ‘அந்தா கைப்பைய அடிச்சிக்கிட்டு ஒருதன் ஓடுரான் புடியிங்க! தாருட பையோ! என்ற பதூர் தன் கேன்பேக்கைப் பார்த்தான் வெறும் பட்டிதான் தொங்கியது. இவன் ‘பைய’ என்று கத்தியதும் சிங்களம் தெரிந்தவர்கள் பஸ் குலுங்கச் சிரியோ சிரிப்பாக சிரித்தார்கள்.

‘என்ட அல்லாஹ்’ என்றவன் தன் மகள் மகிசாவை ‘எழும்பும்மா அவன்ட தொண்டையில கட்ட நம்மட பேக்க அறுத்து எடுத்துக்கிட்டு ஓடிட்டாம்மா”

அப்போதுதான் விழித்தாப் போல மகள் பதறி எயாபோர்ட் வந்துட்டா வாப்பா? என்று கேட்டாள். எயார்போட்டுக்கு பெயித்து என்னாம்மா செய்ற விசா, பாஸ்போட் காசி எல்லாம் அதுக்குள்ளதானே! கிண்ணியாக்குப் போறத்துக்கும் காசில்லயம்மா’ பதூர் கண்களால் வளிந்த கண்ணீர் கூர்மை அவன் அறியாதது.

இப்படியோ சம்பவத்தை முழுவதும் கவனித்திருந்த மகிசாவின் பக்கத்திலிருந்த சீமாட்டி இந்தாங்க வூட்டுக்கு போயி சேருங்க ஊறுக்குப் போகவும் உணவுக்கும் போதும் மற்றவர்களிடம் கையேந்த வேண்டியதில்லை. எரிந்த தந்தை மகளின் மனங்களின் நெருப்பை சிறிது தணித்திருந்தாலும் அவ்வளவு இனிமையாகப் பேசி இப்படிக் கழுத்தறுத்தவனின் முகம் பதூருக்கு மனக்கண் முன்தோன்றி மறைந்தது.

வீடு வந்து சேர்ந்து பொலிஸ் என்றி எடுத்து அடையாள அட்டை பாஸ்போட் எடுக்க தாத்தா அனுப்பிய வீஸாவும் வந்து சேர்ந்தது. மகிசா சுமார் இரண்டரை வருஷங்கள் கழிந்து ஆளடையாளம் மதித்துக்கொள்ள இயலாமல் நிறம் எலுமிச்சைப் பழ மாதிரி வந்திருந்தாள்.

போகும் போதே வனப்பு மிகு அழகி வெளிநாட்டு சொகுசு சாப்பாடு இடம் வசதி கவலை என்பது கனவிலும் இல்லை. எயர்போட்டில் உல்லாச பிரயாணி ஒருத்தி தன்னை உற்றுப் பார்ப்பதாக பதூரு எண்ணிக் கொண்டவன். தன் மகள் மகிசாவைத் தேடினான்.

“வாப்பா!” குரல் மகள் மகிசாவின் குரல்தான். வாப்பா! வாங்க வாப்பா! என்றாள் மகிசா.

அட வெளிநாட்டுப் புள்ள நம்ம மகள் மகிசாதான் என்பதை தெரிந்து கொள்ள கொள்ளை நேரம் எடுத்தது. கன சனம் ஒரு பிளேன் சனத்தையும் வரவேற்க வந்த சனம் எல்லாம் சேர்த்து கொஞ்சமா நஞ்சமா அவ்வளவு கூட்டத்துக்குள்ளே மகளை மதிப்பெடுப்பது பதூருக்கு சிரமமாகவே இருந்தது – மகளின் பேக் சாமான் வண்டியை தள்ளி வந்து வேனுக்குள் ஏற்ற ஆயத்தமாக அஸ்ஸலாமு அலைக்கும் பதுருக் ‘காக்கா’ சப்பாணி வ அலைக்கும் சலாம் என்ற பதூர் அவனை உற்றுப் பார்த்தான்

இரண்டு காலும் அற்ற சப்பாணி தன் பெத்த மகளையே திடீர் என மதியாத பதூர் மூன்று நான்கு வருடங்களுக்கு முன் கண்டவனை அடையாளம் கண்ட மனம் பதிவு பதூரின் முகபாவம் மாறியது. இவன் நடிப்புக்காக யாசகம் பெறுவதற்காக காலை மடித்து வைத்திருக்கிறான் என்று நினைக்கிறீர்களா? என்றவன் அழுதவுடன் பதூர் மனம் நெகிழ்ந்தான். மகிசா தன் தந்தையின் காதுக்குள்ளே இவன் தானா வாப்பா நம்மட பேக்கை திருடி ஓடினவன்” என்றாள். ‘ஓம்’ புள்ள அவன்தான்.

‘அன்றுக்கு ஓடின நான் வேகமா வந்த லொறி ஒன்றுடன் முட்டினது தான் எனக்கி நெனப்பு இருந்திச்சி பொறவு ஒன்னும் தெரியல்ல மூனு நாளுக்குப் பொறவுதான் தெரிய வந்தது இரண்டு காலும் களட்டியாச்சி என்று அல்லாஹ்வுக்கு வேண்டியா என்ன மன்னிச்சிருங்க ராஜா’ என்றான் சப்பாணி அழுது அழுது.

மகிசா தன் பேசைத் திறந்து அள்ளி அவன் விரிப்பில் கிடந்த தாள், சில்லறைகளுடன் அவள் காசு கத்தையை போட்டாள். சப்பாணி மேலும் அழுதான்.

Comments