கருவுறல் சிகிச்சையளிப்பில் ஒப்பற்ற 60% வெற்றியை எய்தியுள்ள Ninewells Fertility Center | தினகரன் வாரமஞ்சரி

கருவுறல் சிகிச்சையளிப்பில் ஒப்பற்ற 60% வெற்றியை எய்தியுள்ள Ninewells Fertility Center

பெண்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்றுள்ள, இலங்கையின் முன்னணி தனியார் மருத்துவமனையான நைன்வெல்ஸ், தனது கருவுறல் சேவைகளின் வெற்றியில் முக்கிய மைல் கல்லை அண்மையில் எட்டியது.

நைன்வெல்ஸ் மருத்துவமனையானது ஜுலை மாதத்தில் 60% கருவுறல் நிலையினைப் பதிவுசெய்துள்ளதோடு, சர்வதேச சராசரியான 40 % இனையும் வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

தங்களது வெற்றி குறித்துப் பேசிய நைன்வெல்ஸ் மருத்துவமனையின் கருவுறல் நிலைய பொதுமுகாமையாளர் தரங்க விரசூரிய, “நெறிமுறைகளைக் கடந்து கருவுறல் சிகிச்சையில் முன்னோடிகளாக வளர்ச்சியடைந்ததையிட்டு நைன்வெல்ஸ் மருத்துவமனை மகிழ்ச்சியடைகின்றது. எங்கள் நிலையமானது IVF சிகிச்சைகளில் தொடர்ச்சியாக 40% வெற்றியினைப் பதிவுசெய்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களில் நிலையான வளர்ச்சி கண்டு, ஜுலை மாதத்தில் 60% எனும் வெற்றி இலக்கினைப் பதிவுசெய்துள்ளது.”

“எங்கள் நிலையத்தின் இவ்வெற்றியானது, அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவுறலில் கையாளப்படும் நடைமுறைகள், மற்றும் மருத்துவர்கள், கருவியல் நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் எனும் எங்கள் ஊழியர் குழாத்தின் ஒற்றுமையான அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் என்பனவற்றாலேயே சாத்தியப்படட்டது. இவர்கள் தாங்கள் வழங்கும் இச்சிகிச்சை வெற்றிகரமாக அமையும் என்பதனையும், இச்சிகிச்சைகள் இடம்பெறும் சூழல் அதற்குச் சாதகமாய் அமையும் என்பதனையும் உறுதி செய்வர்” என்றார்.

கருத்தரித்தல் தொடர்பில் பிரச்சினைகள் இலங்கைப் பெண்கள் மத்தியில் தற்போது பரவலாகக் காணப்படுகின்றது. அவ்வாறானவர்களில் அனேகர் தற்போது தாங்கள் கருத்தரிப்பதற் கேதுவான சிகிச்சைகளை எதிர்கொள்கின்றனர். நைன்வெல்ஸ் மருத்துவமனையின் கருத்தரித்தல் நிலையமானது 2004 ஆம் ஆண்டில் பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று நிபுணர் டாக்டர் ரோஹண ஹத்தொட்டுவையின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டது.

இது இலங்கையிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கருத்தரித்தல் தொடர்பிலான முக்கியமான நிலையமாக உள்ளது. அதன் ஆரம்பம் முதல் கருத்தரித்தலில் சிறந்த பெறுபேற்றினைப் பெறும் வகையில் அதி நவீனத் தன்மையினைப் புகுத்துவதிலும், சிறந்த பெறுபேற்றினைப் பெறுவதிலும், ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பேணப்பட்டு வருவதனைப் போன்ற சர்வதேச வழிகாட்டல்களைப் பேணுவதிலும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. 

Comments