'AIC Campus' மற்றும் 'IPAC Business School France’ இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தும் ஐரோப்பிய வணிக பட்டம் | தினகரன் வாரமஞ்சரி

'AIC Campus' மற்றும் 'IPAC Business School France’ இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தும் ஐரோப்பிய வணிக பட்டம்

இலங்கையில் மூன்றாம் நிலை கல்வியை மேலும் வலுப்படுத்துவதில் தலைமைத்துவம் வகிக்கும், இலங்கையின் முன்னணி பன்னாட்டு கல்வி வழங்குனரும், IMC AIC கல்விக் கூட்டமைப்பின் உறுப்பினருமான AIC Campus, பிரான்ஸின் IPAC School of Business உடனான தனது கூட்டிணைவு தொடர்பில் அறிவித்துள்ளது. அதன் மூலமாக சா்வதேச அங்கீகாரம் பெற்ற, சர்வதேச வணிகம் மற்றும் சந்தைப்படுத்தலில் Bachelor in Business Administration (BBA) பட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துகிறது. இந்த மூலோபாய கூட்டிணைவின் மூலம் இலங்கை மாணவா்கள், வெளிநாட்டில் கல்வி கற்க ஏற்படும் செலவின் ஒரு பகுதியுடன், பிரான்ஸின் முன்னணி பல்கலைக்கழகத்தின் வணிக பட்டத்தை இங்கிருந்தே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இதன் அறிமுக விழாவில், இஸபெல்லா மிஸ்கொட் (Charge d’affairesa.i of the Embassy of France to Sri Lanka and Maldives)- பிரதம அதிதி, வெலன்டினா வொல்ட்ரம் (Cultural Attach of the Embassy of France to Sri Lanka and Maldives) – கெளரவ அதிதி, ஜெரால்டின் ஹசனொட் (பணிப்பாளா், வெளிநாட்டு அலுவல்கள் - IPAC Business School France), டாக்டர் சஞ்சயதேவ முனசிங்க (தலைவர், AIC Campus), டாக்டா் கிஷான் சுமணசிறி (நிறைவேற்றுப் பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி - AIC Campus), மற்றும் AIC Campus, IPAC Business School France என்பவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஐரோப்பாவுக்கு வெளியே IPAC யின் முதல் சர்வதேச கற்கை நிலையமாக இலங்கையின் தனியார் கல்வி நிறுவனமான AIC Campus விளங்குவதுடன், இந்த கூட்டிணைவின் மூலமாக இலங்கையின் தனியார் கல்வித்துறையில் IPAC காலடி வைத்துள்ளது. IPAC பிரான்ஸின் முதல் வணிக பாடசாலை என்பதுடன், ஐரோப்பிய ஒன்றியம் அதன் மூன்று வருட பட்டப்படிப்பை இலங்கை மாணவர்களுக்கு வழங்குகிறது.

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.