இரத்தினபுரியில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்ெகாடுப்பேன் | தினகரன் வாரமஞ்சரி

இரத்தினபுரியில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்ெகாடுப்பேன்

நேர்கண்டவர் -:  எஸ்.ஆர். இரவீந்திரன்
இரத்தினபுரி தினகரன் நிருபர்

இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் அபிலாசைகள் காலம் காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. அதனை நல்லாட்சியில் நிச்சயம் நிறைவேற்றியே தீருவேன் என இரத்தினபுரிமாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினரும் இரத்தினபுரி மாவட்டஅபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரும் இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளருமான ஏ.ஏ.விஜேதுங்க (சுதுமல்லி) கூறினார். இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் பல்வேறு பிச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இது குறித்து அவருடன் நடத்தப்பட்ட நேர்காணலைக் கீழே தருகிறோம்.

 கேள்வி: இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர்.ஆனால், எந்த ஓர் அரசியல்வாதியும் அதுபற்றி அலட்டிக்ெகாள்கிறார்கள் இல்லையே?

பதில்:ஆம். இம்மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்தாலும் அவர்களின் பிரச்சினைகள் மட்டும் தீர்க்கப்படுவதில்லை. ஐ.தே.க ஓரளவுஅம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துள்ளதாக கருதுகிறேன். குறிப்பாக கடந்த காலங்களில் 15 இலட்சம் பேருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அதனால், பெரும்பாலான அரசியல்வாதிகள் தோட்டமக்கள் பின் உள்ளபோதிலும்; அவர்களுக்கான சேவைகள் எவையும் செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு சிலசில சேவைகள் செய்தாகர்கள். முழுமையானசேவை எதனையும் யாரும் செய்யவில்லைஎன்றே கூற வேணடும்.

கேள்வி: ஐ.தே.கட்சியும் ஸ்ரீ.ல.சு.கட்சியும் இணைந்து நடத்தும் நல்லாட்சியில் இம்மக்களுக்கு சிறந்த சேவையைச் செய்யலாமே.?

பதில் :அதற்கானமுயற்சியில் ஈடுபட்டுவருகின்றோம். முன்னரைவிட இந்த நல்லாட்சியில் எந்தவித போட்டி பொறாமையும் இன்று மக்களுக்குச் சேவையாற்ற முடியும். அதற்கான நடவடிக்ைககள் தொடர்ந்து வருகின்றன.

கேள்வி: அப்படியென்றால் நீங்களும் இம்மக்களுக்கு எந்தவிதமான சேவையும் செய்யவில்லை என்கிறீர்களா?

பதில் நான் அப்படி கூறவில்லை. முடியுமானவரை நாம் சேவை செய்து வருகின்றோம். நாம் செய்யும் சேவை போதுமானதாகவில்லை என்றே கூறுகிறேன்.

கேள்வி: இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் நீண்டநாள் அபிலாசைகளில் ஒன்று இரத்தினபுரியில் சகல வசதிகளும் கொண்ட தமிழ் பாடசாலையொன்று அமைப்பதாகும். இது இன்னும் கானல் நீராக உள்ளது. இதற்கு உதவும் எண்ணம் இருக்கிறதா?

பதில். இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தைத் தர முயர்த்துவதற்குத் தேவையான காணியை பெற்றுக்கொள்ளும் பொருட்டுநான் இரத்தினபுரி நகர சபைக்குச் சொந்தமான காணியொன்றைப் பெற்றுக்கொள்ள இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக்கு குழுக்கூட்டத்தில் அதன் இணைத்தலைவர் என்றரீதியில் இருமுறை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இரத்தினபுரி மாநகர சபைக்கு உரியமுறையில் அறிவிக்கப்பட்டது. அதனை அப்போதைய மேயர் ( ஐ.ம.சு.கூ) மற்றும் மாநகரஆணையாளர் இருவரும் ஏற்றுக்கொண்டு இக்காணியை வழங்கத் தீர்மானித்து இதற்கான நடடிக்கையை மேற்கொண்டனர். எனினும், அதனை அவர்கள் இறுதியில் வழங்கவில்லை.

இதன் பின்னர் இக்காணிவிடயம் குறித்துமீண்டும் இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுத் தீர்க்கமான முடிவுக்கு வந்து இரத்தினபுரிமாநகர சபை ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டது. அவர் அதனை வழங்க முன்வந்த போதிலும். அவர் திடீரென இடமாற்றப்பட்டார். இதனால் புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர் இக்காணியை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இதற்கான காரணம் என்னவென்று தெரியாது.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், அவர்களின் பணிப்புரைகளுக்கமைய இக்காணியில் ஒரு பகுதியை வழங்க நடடிக்கை மேற்கொள்ளப்பட்டு சபரகமுவ மாகாண சபையிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. எனினும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணமும் எனக்குதெரியவில்லை.

கேள்வி: நடைபெற்ற சனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் அமோக ஆதரவளித்தனர். எனினும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதனை மறந்துவிட்டனர். இப்போது உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு வைத்துப் புதிய கோஷமா என்ற கேள்வி எழுகிறதே?

பதில்: நீங்கள் சொல்வது எனக்குபுரிகிறது.. நான் எதற்காகவும் பொய் வாக்குறுதி அளிப்பவனல்ல. நான் அரசியலில் எதனையுமே சம்பாதிக்கவில்லை. என்னிடம் உள்ளதை இழந்தே அரசியல் செய்துள்ளேன். அத்துடன் என்னிடம் வருபவர் தமிழரா, சிங்களவரா, முஸ்லிமா? என்று பார்ப்பதில்லை. அத்துடன் என்னிடம் கட்சி பேதங்களும் இல்லை.இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்குத் தேவையான காணியை நானே முன்வந்து பெற்றுக்கொள்ள முயற்சிசெய்கிறேன். யாரும் என்னிடம் எழுத்து மூலமாக விண்ணப்பிக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இக்காணியை எப்படியாவது பெற்றுக் கொடுக்க உறுதி பூண்டுள்ளேன். குறைந்தது ஒரு ஏக்கர் காணியாவது பெற்றுக்கொடுக்கப்படும்.

கேள்வி:காணியைப் பெற்றுக்கொண்டால் மட்டும் போதுமென்று கருதுகின்றீர்களா?

பதில்:பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளங்களைப் பெற்றுக்கொள்ள கல்விஅமைச்சின் ஊடாகப் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சில பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறிப்பிட்ட காணியைப் பெற்றுக்கொண்டபின்னர் அதில் புதிதாக கட்டடங்கள் அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும். இப்பாடசாலையில் கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் விஞ்ஞான பாடநெறியைஆரம்பிக்கவேண்டுமென்பதே எனது ஆசையாகும்.

கேள்வி:நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவரும் பிரதிஅமைச்சர் ஒருவரும் நீண்டகாலமாக இதனையே கூறிவருகின்றனரே?

பதில்: அமைச்சர் ஜோன் செனவிரட்ன புதிய நகரில் புதிதாக 5 ஏக்கர் காணி பெற்றுத் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கல்வி கற்கும் வகையில் மும்மொழி பாடசாலை ஒன்று அமைக்கப்போவதாக கூறப்படுகின்றது. இதன் உண்மைநிலைஎனக்குதெரியாது. எது எப்படியோ இரத்தினபுரிதமிழ் மகாவித்தியாலயத்தை சகல வசதிகளும் கொண்ட பாடசாலையாகத் தரமுயர்த்துவதே எனதுஆசையாகும்.

கேள்வி: இரத்தினபுரி மாவட்டதமிழ் மக்கள் கடந்த தேர்தல்களின் போது தங்களுக்கு அல்லது தங்கள் கட்சிக்குவாக்களித்தார்கள் என்பதை ஏற்றுக்ெகாள்கிறீர்களா?

பதில்: என்ன இப்படியொரு கேள்வி கேட்டுவிட்டீர்கள். 

கடந்த ஆட்சிக்கு முன்னர் எமக்குப் பெரும்பாலும் வாக்களித்த மக்கள், பின்னர் அதில் மாற்றமடைந்தது, தற்போது புதிய நல்லாட்சியில் எமக்குக் கூடுதலான தமிழ் மக்கள் வாக்களித்து வருகின்றனர். தொடர்ந்து வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.

இவர்களின் முழுமையானஆதரவைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: எவ்வாறான செயற்றிட்டங்கள் தங்களிடம் உள்ளன?

பதில்: முதலில் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ள வேண்டும் எம்மீது நம்பிக்கையை உருவாக்கவேண்டும். அதற்காக அவர்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யவேண்டும். இரத்தினபுரி மாவட்டதோட்டங்களுக்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. வீதி,குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக தோட்டரீதியாக வீடமைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றன. இவை ட்ரட்ஸ் நிறுவனம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

கேள்வி: தோட்டப் பகுதிகளுக்கு புதிய வீடமைப்பு திட்டங்கள் என்றீர்கள் எவ்வகையான வீடமைப்பு திட்டங்கள் என்று கூற முடியுமா?

பதில்: இரத்தினபுரிமாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுஅபாயமுள்ள பகுதிகள் காணப்படுகின்றன. எனவே வீடமைப்பதற்கான காணிகளுக்குப் பாரிய தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இனவே இதனைத் தவிர்க்கும் பொருட்டு தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு நவீன முறையிலான மாடி வீடுகளை அமைக்க யோசனை யொன்றினை முன்வைத்துள்ளேன்.இவ்வீடுகள்அனைத்தும் நகரப்பகுதிகளிலுள்ளதுபோல் நவீனமுறையில் அமைக்கப்படவேண்டும்.எனக் கோரிக்கை விடுத்துள்ளேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசஆகியோரின் ஆலோசனை பெற்று கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். முதலில் 1000 வீடுகள் அமைக்கப்படும்.

கேள்வி : மாடி வீட்டுத்திட்டம் ஏற்கனவே மலையகத்தில் தோல்வி கண்டுவிட்டதாக கூறப்படுகின்றது. அதனால் அத்திட்டம் மலையகத்தில் கைவிடப்பட்டதாக கூறப்படுகின்றதே?

பதில்: மலையகத்தில்தானே மாடிவீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டது. இரத்தினபுரிமாவட்டத்தில் இது வரைஅமைக்கப்படவில்லையே?

கேள்வி: ஐ,தே.கட்சியின் 71 ஆவதுதேசிய மாநாட்டை இரத்தினபுரியில் வைப்பதற்கு விசேட காரணங்கள் ஏதாவது உள்ளதா?

பதில்: அப்படியொன்றுமில்லை. பொலனறுவைமாவட்டத்தில் ஏற்கனவே வைக்க தீர்மானிக்கப்பட்டது. அங்கு வரட்சி காரணமாக இரத்தினபுரிக்கு இடமாற்றப்பட்டது. தற்போது இங்கு வெள்ளம் ஏற்பட்டு காலவறையின்றிஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் தங்களின் கட்சிவெற்றி பெறும் என்று நம்புகிறீர்களா?

பதில்: நிச்சயமாக. காரணம் என்னவென்றால், இத்தினபுரி மாநகர சபை பகுதியிலுள்ள பல வீதிகள் கடந்தஆட்சியின் போது எவ்விதமான அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. இதனால் குண்டும் குழியுமாகக் காணப்பட்டது. மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்தனர். எனது முயற்சியினால் 7 கோடிரூபாய் செலவில் மூன்று வீதிகள் கார்பட் போடப்பட்டு செப்பனிடப் பட்டுள்ளன.

இத்துடன் இன்னுமும் பல அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த மகிந்த ராஜபக்ஸ சனாதிபதிஆட்சியில் எந்த தேர்தலும் நேர்மையாக நடைபெறவில்லை. அரச மற்றும் அதிகார பலம் சகல விதத்திலும் பிரயோகிக்கப்பட்டது.இதனால் எமக்கு அப்போது வெற்றி பெற முடியவில்லை. தற்போது நல்லாட்சியில் அவ்வாறான சூழ்நிலை இல்லை. எனவே, நாம் வெற்றி பெறுவது உறுதி.

 

கேள்வி: இரத்தினபுரி மாநகர சபைக்கு நீண்ட காலமாகத் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்று இல்லையே?

பதில்: இம்முறை தொகுதி ரீதியான தேர்தல் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் வாக்காளர்கள் கூடுதலாக உள்ள தொகுயில் தமிழ் வேட்பாளர் ஒருவர் எமது கட்சிசார்பாக நியமிக்கப்படுவார். அவர், அதில் வெற்றிபெறுவார் என நம்புகிறேன். முடியாதபட்சத்தில் போனஸ் முறையில் நியமிக்க நடவடிக்கைமேற் கொள்ளப்படும் என்றார். 

 

Comments