திருமணம் பற்றி கேள்வி கேட்பதா? | தினகரன் வாரமஞ்சரி

திருமணம் பற்றி கேள்வி கேட்பதா?

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 60 வயது நடிகர் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தால் யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் ஒரு நடிகை குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால், எப்போது திருமணம் என்ற கேள்வியை அவரிடம் கேட்பது வாடிக்கை.

30 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஸ்ரேயாவிடம் இதுபற்றி கேட்டபோது, சூடாக பதில் அளித்த அவர்,

“இந்த கேள்வியை 50 வயதை கடந்த கதாநாயகர்களிடம் போய் கேட்பீர்களா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்பது பைத்தியகாரத்தனம். அதுபோல் திருமணத்துக்கு பின் பெண்களிடம் அழகும், கவர்ச்சியும் குறைந்துவிடும் என்று சொல்வது தவறானது.

பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் நடிப்பு திறமை பாதிக்கப்படாது. அவர்களுடைய நடிப்பு பயணத்தையும் அது எந்தவிதத்திலும் பாதிக்காது. ஒரு நடிகையிடம் கேள்வி கேட்பவர்கள், 60 வயதை கடந்து 20 வயது நாயகிகளுடன் ‘டூயட்’ பாடும் நடிகர்களைப் பார்த்து ஏன் எதுவும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்” என்றார் ஆவேசமாக.தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 60 வயது நடிகர் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தால் யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் ஒரு நடிகை குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால், எப்போது திருமணம் என்ற கேள்வியை அவரிடம் கேட்பது வாடிக்கை.

30 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஸ்ரேயாவிடம் இதுபற்றி கேட்டபோது, சூடாக பதில் அளித்த அவர்,

“இந்த கேள்வியை 50 வயதை கடந்த கதாநாயகர்களிடம் போய் கேட்பீர்களா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்பது பைத்தியகாரத்தனம். அதுபோல் திருமணத்துக்கு பின் பெண்களிடம் அழகும், கவர்ச்சியும் குறைந்துவிடும் என்று சொல்வது தவறானது.

பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் நடிப்பு திறமை பாதிக்கப்படாது. அவர்களுடைய நடிப்பு பயணத்தையும் அது எந்தவிதத்திலும் பாதிக்காது. ஒரு நடிகையிடம் கேள்வி கேட்பவர்கள், 60 வயதை கடந்து 20 வயது நாயகிகளுடன் ‘டூயட்’ பாடும் நடிகர்களைப் பார்த்து ஏன் எதுவும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்” என்றார் ஆவேசமாக.

Comments