என் தங்கச்சி இல்ல'... அஞ்சலி அலறுவது ஏன் தெரியுமா? | தினகரன் வாரமஞ்சரி

என் தங்கச்சி இல்ல'... அஞ்சலி அலறுவது ஏன் தெரியுமா?

தமிழில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பெயரெடுத்தவர் அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் என்று நன்றாக போய்க்கொண்டிருந்த அஞ்சலியின் மார்க்கெட் யார் கண்பட்டதோ பல்வேறு சொந்தப் பிரச்சினைகளால் அதல பாதாளத்துக்கு போனது.

சித்தியுடனான தகராறுக்கு பின் காணாமல் போனார். ரீ எண்ட்ரி ஆனவர் ஜெய்யுடன் காதலை தொடர இன்னும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் அஞ்சலியின் தங்கை என்று சொல்லி ஆராத்யா என்பவர் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். பேட்டிகளில் எல்லாம் இப்படிச் சொல்வதை கேள்விப்பட்ட அஞ்சலி 'எனக்கு தங்கை என யாரும் இல்லை. ஒரே ஒரு அக்கா மட்டும்தான்' என்று ட்விட்டரில் சொல்லியிருக்கிறார். என்ன காரணம் என்று விசாரித்தால் விஷயம் வெளியே வருகிறது. அந்த ஆராத்யா அஞ்சலியின் கேரியருக்கு வேட்டு வைத்த சித்தி பாரதிதேவியின் மகளாம். அதனால்தான் அஞ்சலி இப்படிச் சொல்லியிருக்கிறார்! 

Comments