ட்ரைலர் இல்லாமல் வெளிவரும் 'மெர்சல்’! | தினகரன் வாரமஞ்சரி

ட்ரைலர் இல்லாமல் வெளிவரும் 'மெர்சல்’!

விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள 'மெர்சல்' படம் உலகம் முழுவதும் இம் மாதம் 18 ஆம் திகதி தீபாவளி பண்டிகை தினத்தன்று வெளியாகவுள்ளது.

கடந்த சில நாட்களாக டீசர் மற்றும் ப்ரொமோக்களின் மூலம் விஜய் ரசிகர்களை மெர்சல் படக் குழுவினர் மகிழ்வித்து வந்தனர். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு ப்ரொமோக்களையும் வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே பிரமாதமான வரவேற்பினை பெற்றதுடன், சமூக ஊடகங்களிலும் வைரலாகிக் கலக்கியது.

படக்குழுவினர்கள் 'மெர்சல்' தீபாவளி அன்று ரிலீஸாகும் ஆனால் இப்படத்தின் டிரைலர் வெளியிடும் திட்டம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். படத்தின் ப்ரொமோ வீடியோ அல்லது ஸ்டில்கள் தீபாவளி வரை தினமும் வெளிவரும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். இதனால் டிரைலர் இல்லாமல் ஏமாற்றமடைந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு ஆறுதலாக உள்ளது. 'மெர்சல்' படம் வெளியாக இன்னும் ஒரு சில தினங்கள் மட்டும் இருப்பதால், கடைசி கட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருவதாகவும், டிரைலர் உருவாக்க தற்போது நேரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். மெர்சல் பட டைட்டில் சிக்கலின் போதான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். தீபாவளி வாழ்த்துகளை ஊடகங்களுக்குத் தெரிவித்த பிறகு, டிரைலர் இல்லாமல் நேரடியாக படம் வெளியாக இருப்பதாக தெரிவித்தார் அட்லி.

பட வெளியீட்டுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ரசிகர்கள் தங்களுக்குப் பிரியமான தளபதியை திரையில் காண மிகவும் ஆவலாக உள்ளனர். ஆனால் கேளிக்கை வரி பிரச்னை முடியும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும். இது வரை 3300 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது என்றனர் படக் குழுவினர். 

Comments