ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

 “ஏதோ யோசிச்சிக்கொண்டு வாரனீ போலக்கிடக்கு என்ன யோசின?”

“இல்லையண்ணே உவன் வினாசித் தம்பியின்ட கொப்பர முதியோர் இல்லத்தில சேத்துப் போட்டவன்”

“சுகமில்லாமல் கிடந்தவரென்ன?”

“ஓமண்ண. அவரைப் பார்த்துக்கொள்ள முடியாதெண்டு வினாசியின்ட மனிசி சொல்லிப் போட்டவளாம் உதினால அவன் அவரை முதியோர் இல்லத்தில கிடத்திப்போட்டு வந்தவனாம்”

“அவர் சுகமில்லாமல் கிடந்ததால அவரை பாத்துக்கொள்ள வினாசித் தம்பிக்கு கையில காசு இல்ல உதாலதான் அப்பிடி செய்திருப்பான் வயதானவையெண்டா எங்கட ஆக்களுக்கு சுமையாத்தான் தெரிவினம்”

“சரியாச் சொன்னியள்”

“இங்கபாரு சின்னராசு 2001 இல வயசானவை இலங்கையில 17 இலட்சம் பேர் இருந்தவை 2021 இது 36 இலட்சம் எண்டு அதிகரிக்கப் போகுது 2041 அளவில இலங்கையிண்ட மொத்த சனத்தொகையில 16.7 சதவீதம் வயசானவையா இருப்பினம் எண்டு புள்ளி விவரத் திணைக்களம் கூறுது. அந்த சமயத்தில நாலு இலங்கையரில ஒருவர் வயசானவரா இருப்பினமாம்.”

“அண்ணே எனக்கொரு சந்தேகம் கேட்கவோ?”

“கேளன் சந்தேகமெண்டா கேட்கத்தான வேணும்”

“வயசானவையெண்டவைக்கு என்னவயசண்ண?”

“வயசானவையெண்டா என்னவயசில இருப்பினம் எண்டுதான கேட்கிறனீ?”

“ஓமண்ணே”

“ வயசானவை இல்ல மூத்தவை எண்டா என்ன வயசுக்குப் பிறகு எண்டத சரியாச் சொல்ல ஏலாது. அபிவிருத்தி அடைந்த நாடுகளில மூத்தவரெண்டா 65 வயசானவர் என்டு பொதுவாச் சொல்லுவினம் எங்கட நாட்டில ஓய்வு பெறுகிற வயச தாண்டியவரெண்டா அதாவது 55 வயச தாண்டிப்போட்டா முதியவர் இல்ல மூத்தவர் எண்டு சொல்லுவினம் ஆனா ஓய்வு பெறுகிற வயசை இப்ப 55 இல இருந்து 57 க்குக் கூட்டியவை இப்போ 60 வரைக்கும் கூட்டியிருக்கினம். இத்தினவயசுக்குப் பிறகுதான் ஒருவர் மூத்தவர் என்டு ஐக்கிய நாடுகள் சபையும் குறித்துச் சொல்லேல்ல ஆனா 60 வயசுக்கும் மேற்பட்டவை மூத்தவர் எண்டு பொதுவா கணிக்கினம். ஆனா 60, 70 வயசிலேயும் நிறையப் பேர் நல்லா உசாரா இருப்பினம். அவையள பார்த்தா 50 வயசானவை போலத்தான் இருப்பினம. ஆனா 60 வயசுக்கு மேற்பட்டவை இன்னும் 20 வருசத்தில இலங்கையிலுள்ள தொழில் செய்யும் சனத்தொகையையும் மிஞ்சிப்போடும் எண்டு சனத்தொகை செயற்பாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் நிதியம் கடந்த வாரம் ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது கண்டியோ”

“எச்சரிக்கையெல்லாம் விடுத்திருக்கினமோ”

“இரு... இரு விளங்கப்படுத்திச் சொல்லுறனான் 2012 இல புள்ளிவிபரத்திணைக்களம் நடத்தின குடிசன மதிப்பு கணக்கெடுப்பின்படி இலங்கையின்ட சனத்தொகையில 12.4 சதவீதம் 60க்கும் அதற்கு மேற்பட்ட வயதானவர்களென்டும் கணக்கெடுத்திருந்தினம். ஆனா இப்போதைய நிலையில தொழில் செய்யிற 100 பேரை கணக்கில எடுத்தமெண்டா உதில 20 பேர் வயசானவையா இருக்கினம். உந்த 12.4 சதவீதம் 2030 இல 20 சதவீதமாக அதிகரிக்கயில பல பொருளாதார சிக்கல்கள் வரப்போகுது எண்டுதான் உந்த எச்சரிக்கை சொல்லுது சரியே எண்டபடியா மூத்தவை அல்லது வயசானவையிண்ட விசயத்தில அரசாங்கம் ஒரு கொள்கைய வகுக்க வேணும் என்டு ஐக்கிய நாடுகளிண்டசனத்தொகை செயற்பாடுகளுக்கான நிதியம் சொல்லிப்போட்டுது”.

“மூத்தவையளுக்கு நல்ல வசதிகள் செய்து தர வேணும் என்டு சொல்லுரியல் என்ன ?

“உதை உனக்கு இன்னும் விளங்க சொல்ல வேணுமெண்டா வயசானவையில 75 சதவீதம் பேர் பொருளாதார ரீதியில செயற்படாத நிலையில இருக்கினம். குறிப்பிட்டு சொல்றதெண்டா வயசானவையில 61 சதவீதம் 60 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவை. இதில 43 சதவீதம் தொழில் செய்யினம் எண்டபடியா உவைய இளம் - மூத்தவையெண்டு ஒண்டாச்சொல்ல முடியும். பொருளாதார ரீதியில செயற்படாத மூத்தவையள பொறுப்பெத்து கவனிக்கிற குடும்பங்களில இருக்கிற தொழில் செய்யிறவைக்கு பொருளாதார சுமை வருகுது. ஆனா மூத்தவையா இருக்கிற பெண்களைப் பொறுத்தவரையில 11 சதவீதம்தான் தொழில் செய்கினம். ஏனையவையால அந்த குடும்பத்திலுள்ள தொழில் செய்யிறவைக்கு கூடுதல் சுமையாத்தான் அவையள் இருக்கினம். உந்த மூத்தவை விடயத்தில சரியான நடவடிக்கை எடுக்காம விட்டமெண்டா வறுமை அதிகரிப்பதற்கு உதுவும் ஒரு காரணமாப் போகும் சரியே. மூத்தவை எண்ட வயசானவை அதிகரிக்கிறதுக்கு இன்னுமொரு காரணம் இருக்குது நாட்டில இருக்கிற சிறந்த சுகாதார வசதியும் சிறப்பான கல்வியும் நாட்டு மக்களின்ட ஆயுள்காலத்தை கூட்டுது தெரியுமோ?”

“எங்கட ஆயுட் காலம் கூடிட்டுதோ ?

“ஓம் சின்னராசு 1946 இல ஆம்பிளயளுக்கு 43.3 வருஷமா கிடந்த ஆண்களின்ட ஆயுசும் 41 என்டு; கிடந்த பெண்களின்ட ஆயுசுகாலமும் இப்ப 2017 இல ஆண்களுக்கு 72 வயது எண்டும் பெண்களுக்கு 78 வயது எண்டும் அதிகரிச்சிக்கிடக்குது. அதோட எழுத படிக்கும் திறனுள்ளவர்கள் 1946 இல 58 சதவீதமாக்கிடந்தது இப்ப அது 92 சதவீதமா அதிகரிச்சிப்போட்டுது தெரியுமே?”

“நிறைய பிள்ளையள் படிக்கினம் தான் ஆனா எப்பவும் மொபைல் போனோடதான் திரிகினம”;.

“அதுக்கு என்னப்பா செய்யிறது. இலங்கையின்ட சனத்தொகை அதிகரிச்சிக்கொண்டு போகுது. 2031 இல அது உச்சத்தை அடையும் எண்டு எதிர்பார்க்கப்படுகிது. அது 2031 இல 2 கோடியே 19 இலட்சமாக இருக்கும். 2040 அளவில இலங்கையில உள்ள 4 பேரில ஒருத்தர் மூத்த வயதானவராக இருப்பார். அந்த நேரத்தில தெற்காசியாவில அதிக அளவில மூத்தவை அல்லது வயகானவை இருக்கிற நாடு இலங்கையாத்தான் இருக்கும். மொத்த சனத்தொகையில 25 சதவீதம் உப்பிடி வயசானவையள கொண்டிருக்கேக்க அரசாங்கம் ஓய்வூதியம் மற்றும் நலன் பேணலுக்கும் சுகாதார சேவைக்கும் அதிக அளவில பணத்தை ஒதுக்க வேண்டியிருக்கும் இதால ஏனைய பொது மக்களுக்கான சேவைக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறையும் இதால பொருளாதார பிரச்சினைகள் வரும் எண்டுதான் ஐக்கிய நாட்டு செயற்பாடுகளுக்கான நிதியம் விடுத்த எச்சரிக்கையில சொல்லப்படுகுது. இப்ப விஷயம் விளங்குதோ?”

“ஓமண்ணே விளங்குது.”

“மூத்தவைக்கான சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டதும் அவையள் தொடர்ந்தும் தொழில் செய்வதில அதிக ஆர்வம் காட்டுவினம். இந்த நிலையில அவை தொழில் செய்யக்கூடிய ஆரோக்கியமான நிலையில இருந்தி;னமெண்டா அவைய தொடர்ந்து தொழில் செய்ய வைக்கிறதாலதான் அவையின்ட பொருளாதார சுமையைக் குறைக்கேலும் இல்லையெண்டா அவைய தொழில் வேலையைவிட்டு விலகிப் போட்டினமெண்டா அந்தக் குடும்பத்தில உள்ள ஏனைய தொழில் செய்பவைக்கு பொருளாதார சுமை அதிகரிச்சுப் போடும்;”

“தெரிஞ்சுதண்ணே”

“மூத்தவைக்;கு பல நோய்கள் ஏற்படும். இருதய நோய்கள் புற்றுநோய் வாதநோய் ஆகியவை உதில் முக்கியமானவை நோய்களைக் குணமாக்குற வசதிகளை அரசாங்கம் செய்ய வேண்டிக்கிடக்கும் இலங்கையில் மட்டுமல்ல மொத்த உலகத்தில் 2030 ஆம் ஆண்டில் 20 சதவீதம் பேர் வயசானவையளத்தான் இருக்கப்போகினம் இதுவரை சொன்னவையெல்லாம் இலங்கைக்கு மட்டுமில்ல முழு உலகத்திற்கும் பொருந்தும்”

“வயசுபோச்சுதெண்டா கஷ்டம் என்ன”

“ஆனா சின்னராசு மூத்தவையெண்ட வயசானவைய கௌரவிச்சி உதவுகிற குணம் எங்கட இலங்கையரில் ஒரு சிலரிடம் இல்லையெண்டாலும் நிறையப்பேரிடம் இருக்குது. உதாரணத்திற்கு ஒரு தொலைபேசி சேவை நிறுவனம் ஒன்று தனது தொலைபேசிச் சேவை அழைப்புகளின்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வயசானவையத்தான் நியமிச்சிருக்கினம். உதுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறனாங்கள. உது மட்டுமல்ல அந்த நிறுவனத்தில இந்த மூத்தவைக்கு 04 மணிநேரம்தான் வேலை செய்ய வேண்டிக் கிடக்குது. தெரியுமா உலகில எந்த நாட்டையும் விட இலங்கையிலதான் சனத்தொகை வேகமாக வயசாகிக்கொண்டு வருகுது என்டதும் ஒரு விசயம் சரியே”.

Comments