​சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டாலும் துக்கமடா! | தினகரன் வாரமஞ்சரி

​சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டாலும் துக்கமடா!

இப்போதெல்லாம் நாங்கள் எங்களுடைய சமூகப் பெறுமானங்களை இழந்துகொண்டு வருகிறோம் என்கிறார்கள். இல்லை இழந்தேவிட்டோம் என்கிறார் நண்பர்.

கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகப் பெறுமானம் நகரங்களில் அருகிவிட்டது. ஒருவரையொருவர் சந்தித்துக்ெகாள்வது முதல் சமூகப் பிரக்ைஞ என்பது வரை எதுவுமே கிடையாது. பணத்திற்காக ஓடிக்ெகாண்டிருக்கும் ஒரு மனிதக் கூட்டமே நகரங்களில் இருக்கிறது என்கிறார் நண்பர்.

சிந்தித்துப் பார்த்தால், உண்மையாகவே இருக்கிறது. வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும்போது கடைத்தெருவில் அநாதரவாய் நிற்கும் சிறுவன் பற்றிச் சிந்தித்திருப்போமா, எங்களது பஸ் இருக்ைகயை ஆருக்காவது ஒரு பெரியவருக்குக் கொடுத்திருப்போமா? அல்லது என்றைக்காவது பக்கத்து வீட்டுப் படலையைத் தட்டிக் கதைத்திருக்கிறோமா? என்ற கேள்விகளை அடிக்கடி எம்மையே கேட்டுப் பார்த்தால், நிச்சயம் எமது பதில்கள் மனச்சாட்சியை உறுத்துவதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!

பணத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு சுயநல சமூகக் கட்டமைப்பிற்குள் நாம் சிக்கித் தவித்துக்ெகாண்டிருக்கின்றோம் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?

அதிகாலை நான்கு மணிக்ெகல்லாம் அலுவலகத்திற்கென வெளிக்கிட்டு வரும் நாம், இரவு ஏழெட்டு மணிக்ேக திரும்பிச் செல்கின்றோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அண்டை அயல் வீட்டாருடன் உறவை மேம்படுத்திக் ெகாள்வதற்கென்று ஏதாவது செய்ய முடிகிறதா? அல்லது குடும்பத்தாருடன்தான் குதூகலிக்க முடிகிறதா? இவை எதுவுமே இல்லை!

எனக்குத் தெரிந்த ஒருவர் மாளிகாவத்தைப் பகுதியில் சுமார் இருபது ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஆரம்பத்தில் வாடகைக் குடியிருப்புதான் என்றாலும் பின்னாளில் சொந்தமாக மனையொன்றைக் கொள்வனவு செய்துவிட்டார். அடுத்த வீட்டில் சகோதர இனத்தைச் சேர்ந்த குடும்பம். அவர்களுக்கு இவர் யாரென்றே தெரியாது. ஒரு நாள் (20ஆண்டுகளுக்குப் பின்னர்) அஞ்சலில் ஒரு கடிதம் வருகிறது. அப்போது இவர் (நம்மவர்) வீட்டில் இருக்கவில்லை. அதனால், அந்தக் கடிதத்தை விநியோகிக்க வந்தவர், பக்கத்து வீட்டு அம்மணியிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

பின்னர், இவர் வந்ததும் அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்த அந்தப் பெண்மணி, அப்போதுதான் கேட்கிறார், "நீங்கள் இந்த வீட்டிலா இருக்கிறீர்கள்? இந்த வீட்டின் சொந்தக்காரர் யார்?" என்கிறார், அம்மணி!

"சொந்தக்காரர் நான்தான்" என்கிறார் சோகத்துடன்.

"அப்படியா? நீங்கள்தானா! எனக்குத் தெரியவில்லையே! எங்கே வேலை செய்றீங்கள்? என்று புதிதாகச் சந்திப்பவர்போல் கேள்வி கேட்கிறார்.

இவர் பதிலைச் சொன்னதும், "நல்லது" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள் அந்த ரீச்சர்!

இவரின் வீட்டுக்குச் சற்றுத் தள்ளி ஓரிரண்டு தமிழ் வீடுகள். அதிலுள்ள ஒருவர் ஒரு றிட்டயர்ட். ஊடகத்தில் வேலை. குப்பைகளைக் கொட்டுவதற்காக இவரின் வீட்டுடன்தான் அவர் செல்ல வேண்டும். அந்தச் சில நொடிகளில் குசலம் விசாரிப்பதோடு சரி. ஓரிரு நாள் அந்த வீடு பூட்டிக்கிடக்கிறது.

இவர் நம்மாள்வார், அந்த நபரின் மனைவியைக் கண்டு, "எங்கே அண்ணனைக் காணவில்லையே?" என்று கேட்கிறார். அந்த அம்மாவோ, குய்யோ முறையோ என ஒப்பாரி வைக்கிறார்.

"உங்களுக்குத் தெரியாதா? அவர் மோசம் போய் இரண்டு நாள் ஆகிட்டுதே! பொரளையில் மலர்ச்சாலையில் சடலத்தை வைத்திருக்கின்றோம். நாளைக்கு அடக்கம்" என்று சொல்கிறார். இவருக்கு அந்தப் பெண்மணியின் பதில் கன்னத்தில் அறைந்ததைப்போல் இருந்திருக்கிறது.

காலையில் போகிறோம். இரவில் திரும்புகிறோம். அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் போய்விட்டது. இப்படியும் ஒரு ந(க)ரக வாழ்க்ைக தேவைதானா? என்று அவரையே கேட்டுக்ெகாண்டிருக்கிறார். மாடி மனைகள் உயர்ந்திருக்கும் அளவிற்கு நகரங்களில், மக்களின் மனங்கள் உயரவில்லை என்பது அவரின் ஆதங்கம்.

அதனைவிடவும், செத்த வீடுகள் நடந்தால், வீட்டில் எதுவும் இருக்காது. எல்லாம் மலர்ச்சாலையுடன் முடிந்துவிடும். அதனால், அக்கம் பக்கத்தாருக்கு எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. இதுவே கிராமத்திலென்றால், இன்னாரின் இன்னார் இறந்துவிட்டார் என்ற தகவல் எப்படியும் கிடைத்து விடும். துயர் பகிர்தல் நடக்கும். இங்கே கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் சமூகப் பெறுமானங்கள் தொலைக்கப்பட்டுள்ளன. தானுண்டு தன் வேலையுண்டு என்ற நிலையே எல்லோரினதுமாக இருக்கிறது. இஃது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.

நகரங்களில் சமூகக் கட்டமைப்புனான வாழ்க்ைக இல்லை என்று குறைபட்டுக்ெகாண்டாலும் நகரங்களில் வாழ்பவர்கள், தமது சொந்தச் சமூகத்திலிருந்தும் அந்நியப்பட்டுக் ெகாண்டுள்ளனர். உறவுகளை மேம்படுத்திக்ெகாள்வதற்கான எந்தச் சந்தர்ப்பத்திலும் கலந்துகொள்ளாத தொழில் பிணைப்பில் சிக்குப்பட்டுள்ளனர். பண்டிகைக் காலங்களில் உறவுகளைச் சந்திப்பது மாத்திரமன்றித் திருமணம், பிறப்பு, இறப்புகளில் பங்குகொள்வதிலிருந்தும் விலகியிருக்கிறார்கள்.

பற்று நீக்கித் தொழில் செய் என்று விவேகானந்தர் வலியுறுத்தி அறிவுறுத்தியிருந்தாலும், அநேகமானோர் தொழிலில் விலங்கிடப்பட்டவர்களாகவே உள்ளனர். அதிலும் ஊடகத்துறையில் உள்ளவர்களைச் சொல்லவே வேண்டாம். அவர்களின் நிலையைப்பொறுத்தவரை சொன்னாலும் வெட்கம், சொல்லாவிட்டாலும் துக்கம் என்றுதான் இருக்கிறது என்கிறார் நண்பர். இதுபற்றி இனியாவது சிந்திப்போம். அயல் வீட்டானையும் இதை வாசிக்கச் செய்வோம்! 

Comments