அதிநவீன கதிரியக்க மற்றும் இமேஜிங் அலகை அறிமுகப்படுத்தும் Ninewells மருத்துவமனை | தினகரன் வாரமஞ்சரி

அதிநவீன கதிரியக்க மற்றும் இமேஜிங் அலகை அறிமுகப்படுத்தும் Ninewells மருத்துவமனை

இலங்கையின் பெண்கள் மற்றும் சிறார்கள் பராமரிப்பில் முன்னணி வகிக்கும் நைன்வெல்ஸ் மருத்துவமனை அதன் முற்றுமுழுதான கதிரியக்க மற்றும் இமேஜிங் பிரிவினை மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ் கதிர்கள், அல்ரா சவுண்ட், CT ஸ்கேன், MRI உபகரணம் என்பன உட்பட நோய்க்குணம் கண்டறியும் கதிரியக்க உபகரணங்கள் கொண்டு நேர்த்தியான நோயாளிகளை இலக்குவைத்து, சிறந்த சேவைகளை வழங்க இவ்வலகு உறுதி பூண்டுள்ளது.

இவ்வலகின் அறிமுகவிழாவில் உரையாற்றிய Ninewells மருத்துவமனையின் மருத்துவப் பணிப்பாளர் Dr. விபாஷ் விஜேரட்ண, “அதிநவீன, கதிரியக்க மற்றும் இமேஜிங் சேவைகளை பொதுமக்களுக்காகத் திறப்பதையிட்டு நாம் பெரு மகிழ்வுகொள்கின்றோம்.

எங்கள் நோயாளிகளின் நோய்க்குணங்குறி அறியும் இமேஜிங் தேவைப்பாடுகளுக்காக பாதுகாப்பாகவும், சினேகபூர்வமான வகையிலும், இச்சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எங்களது நிபுணத்துவம் மிக்க கதிரியக்க நிபுணர்கள், அதிசிறந்த பயிற்சி பெற்ற கதிர்ப்படவாளர்கள் மற்றும் தாதியர்களுடன் இணைந்து, 24 மணிநேரமும் பணியாற்றி, இத்துறையில் உயர்தர தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நோயாளர்களுக்கு உயர் தர பராமரிப்பினை வழங்குகின்றனர்.”

இவ்வுபகரணங்கள் பற்றி விளக்கிய நைன்வெல்ஸ் மருத்துவமனையின் கதிரியக்கப் பிரிவுத் தலைவர், எம்.ஜீ ஜீ அமரசிங்க, “Ninewells மருத்துவமனையின் கதிரியக்க மற்றும் இமேஜிங் பிரிவானது, இந்நாட்டின் ஒரேயொரு Toshiba Aplio800 Ultrasound scanner இனைக் கொண்டிருக்கின்றது.

இவ்வுபகரணத்தின் சிறப்பம்சம் யாதெனில், இது மருத்துவ ரீதியான குணங்குறி அறிதலில் துல்லியத்தினை அதிகரிப்பதோடு, நுண் இரத்த ஓட்டம் கண்ணுக்குப் புலப்படும் தன்மையினையும் அதிகரிக்கின்றது. 

Comments