நவீன Singer GEO Smart குளிர்சாதனப் பெட்டிகள் | தினகரன் வாரமஞ்சரி

நவீன Singer GEO Smart குளிர்சாதனப் பெட்டிகள்

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, ஆசியாவில் மிகச்சிறந்ததும் எரிசக்தித் திறன் கொண்டதுமான Singer GEO Smart குளிர்சாதனப் பெட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 100% சூழலுக்கு தீங்கற்ற R600a குளிர் பதனத்துடன் வெளிவரும் Singer GEO Smart ஆனது மின்சாரத் திறனில் 50வீத அதிகரிப்பைத் தருகின்றது. செப்புக் குழாயானது (Copper tubing) நீடித்து உழைப்பதையும், குறைந்த அளவில் பேணற்சேவை தேவைப்படும் ஒன்றாகவும் திகழ்வதற்கு உத்தரவாதமளிப்பதுடன், அதன் LED lighting ஆனது அதியுயர் பிரகாசம் கொண்டதாகவும், நீடித்து நிலைப்பதாகவும் உள்ளதுடன், எரிசக்தியையும் சேமிக்க உதவுகின்றது. உள்நாட்டில் Regnis தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் Singer GEO Smart நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிங்கர் காட்சியறைகளிலும் கிடைப்பதுடன், அதன் அமுக்கிக்கு (Compressor) 10 வருட சிங்கர் உத்தரவாதமும் கிடைக்கப்பெறுகின்றது. 6 வடிவங்களில் கிடைக்கும் இதில் Inverter, No Frost மற்றும் Direct Cool தெரிவுகள் அடங்கியுள்ளதுடன், இதில் மிகப்பெரிய அளவிலான வடிவமானது 230 லீட்டர் கொள்ளளவு உடையது.

மிகச்சிறந்த தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ள Singer GEO Smart குளிர்சாதனப்பெட்டி, smart தொழில்நுட்பத்தை வழங்குவதுடன், உணவை நீண்ட நேரத்திற்கு வைத்துப் பேணுவதற்கு உதவி, உயர் மட்டங்களில் எரிசக்தித் திறனையும் வழங்குகின்றது. சுற்றுச்சூழல் வெப்பநிலை கட்டுப்படுத்தி (Ambient Temperature Sensor), மின்சார ஏற்றத்தாழ்வு கட்டுப்படுத்தி (Power Fluctuation Sensor), சுமை கட்டுப்படுத்தி (Load Detector), கதவு காப்பு (Door Sentry) மற்றும் இரட்டை வெப்பநிலைக் கட்டுப்பாடு (Dual Temperature Control) ஆகியன இந்த smart தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ளன. Ambient Temperature Sensor தொழில்நுட்பமானது வெளி அறை வெப்பநிலையை குளிர்சாதனப்பெட்டி இனங்கண்டு, அதற்கு அமைவாக குளிர்சாதனப்பெட்டியினுள் வெப்பநிலை சீராக்கப்படுகின்றது.

Power Fluctuation Sensor தொழில்நுட்பமானது மின்சார விநியோகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை இனங்கண்டு குளிர்சாதனப்பெட்டியின் அமுக்கியானது (compressor) 157 வாற்று முதல் 255 வாற்று வரை தொழிற்பட இடமளிக்கின்றது. மின்சார விநியோகம் 250 வாற்றுக்கும் மேலாக அதிகரிக்கும் பட்சத்தில் மின்வலு காப்பு முறைமையானது (Power Guard) மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதை உறுதிசெய்து compressor இற்கு எவ்வித சேதமும் இடம்பெறாமால் பாதுகாக்கின்றது.

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.