நாளைய உதைப்பந்தாட்ட நட்சத்திரங்களை வளர்க்கும் முயற்சியில் Allianz நிறுவனம் | தினகரன் வாரமஞ்சரி

நாளைய உதைப்பந்தாட்ட நட்சத்திரங்களை வளர்க்கும் முயற்சியில் Allianz நிறுவனம்

வருடாந்த Allianz கனிஷ்ட உதைப்பந்தாட்ட முகாம் அண்மையில் இந்தோனேசியாவின் பாலி நகரிலும், ஜேர்மனியின் மியூனிச் நகரிலும் இடம்பெற்றது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்நிகழ்வில் ஜேர்மனி FC Bayern விளையாட்டுக் கழகத்தின் பிரபல வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் வழிநடத்தலில் ஆர்வமூட்டும் பயிற்சி அமர்வுகளும் இடம்பெற்றன. ஆர்ஜென்டீனா, ஆஸ்திரியா, பெனிலோக்ஸ், சீனா, கொலம்பியா, குரோஷியா, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஹொங்கொங், ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, மலேசியா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்த்துக்கல், சிங்கப்பூர், ஸ்பெயின், இலங்கை, தாய்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து 53 பெண்களும், ஆண்களும் ஜேர்மன் முகாமில் பங்கு பற்றியிருந்தனர்.

இதில் பங்குபற்றியவர்களுக்கு FC Bayern உதைப்பந்தாட்டக் கழகத்தின் உத்தியோகபூர்வ பயிற்சி மைதானத்தில் பயிற்சிகளைப் பெறும் வாய்ப்புக் கிட்டியதுடன், Allianz அரங்கத்தில் நேரடி Bundesliga போட்டியை கண்டுகளிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டனர். இலங்கையிலிருந்து நாலந்தா கல்லூரியின் சமந்த் கொடித்துவக்கு இதில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டார்.

சீனா, மலேசியா, இந்தோனேசியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 49 பேர் இந்தோனேசிய முகாமில் பங்கு பற்றியுள்ளனர். FC Bayern விளையாட்டுக் கழகத்தின் பிரபல வீரர்களான கிளவுஸ் ஓகென்தாலர் மற்றும் ஜியோவேன் எல்பர் ஆகியோரின் வழிநடாத்தலில் பயிற்சி அமர்வுகள் இடம்பெற்றன. இலங்கையிலிருந்து கல்கிசை புனித தோமையர் கல்லூரியின் ஜெஹான் அத்தபத்து மற்றும் நாலந்த கல்லூரியின் சமந்த் கொடித்துவக்கு ஆகியோர் இதில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டனர். இதற்குப் புறம்பாக, ஜெஹான் அத்தபத்து சிறந்த நேர்மையான விளையாட்டு வீரருக்கான விருதையும் பெற்றுள்ளார். கட்டாரில் டோஹா நகரிலுள்ள புகழ்பெற்ற Aspire Academy இல் ஒரு வாரகால உதைப்பந்தாட்டப் பயிற்சியில் பங்குபற்றும் வாய்ப்பு இதன் மூலமாக கிடைத்துள்ளது.

Comments