நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் முதலாவது Fintech Hackathon போட்டி | தினகரன் வாரமஞ்சரி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் முதலாவது Fintech Hackathon போட்டி

இலங்கையின் முதலாவது நிதிச்சேவைகள் துறையின் புத்தாக்க நிலையம் அண்மையில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. துறைக்கான தமது தூர நோக்குடைய தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்கள் ஆகியவற்றுக்கான தமது அர்ப்பணிப்பான செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இது அமைந்துள்ளது.

புத்தாக்க நிலையம் என்பது, ஒரு கனவு ஆய்வுகூடமாகும், கனவுகளை நனவாக்கக்கூடிய ஒரு பகுதியாக அமைந்துள்ளது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் சிறந்த சூழலை உருவாக்கியுள்ளதுடன், அவர்களின் கிரெகரி வீதியில் அமைந்துள்ள Kaffeine Labஐ இதற்காக பயன்படுத்தியுள்ளது. வங்கியின் கட்டமைப்புகளை வடிவமைப்பாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் வியாபித்து, அவர்களை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தற்போதைய உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, புதிய Fintech தயாரிப்புகளையும் சேவைகளையும் வடிவமைத்து, அவற்றை வங்கியின் சொந்த கட்டமைப்புகள் அல்லது மூன்றாவது நபர் கட்டமைப்புகளினூடாக வழங்கச் செய்வது பாரிய இலக்காக அமைந்துள்ளது.

Kaffeine Labஇன் பிரதான நோக்குகளில், நிதிசாராத்துறையைச் சேர்ந்த தொழிற்துறைகள், கல்விமான்கள், ஆரம்ப நிலை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோரைக் கொண்டு, வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை தீர்த்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிதித்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவது மற்றும் உறுதியான புத்தாக்கமான மற்றும் டிஜிட்டல் கலாசாரத்தை நேஷன்ஸ் ட்ரஸ்ட் இனுள் ஏற்படுத்தி, சகல உள்ளக பங்குதாரர்களுடனும் இணைந்து தீர்வுகளை உருவாக்கி, வங்கி இயங்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது போன்றன அடங்கியுள்ளன.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், எமது வாடிக்கையாளர்களுக்கு எதிர்காலத்தை அருகில் கொண்டுவருவதற்கான வங்கியின் பயணத்தில் Kaffeine Lab மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. சர்வதேச ரீதியில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து செல்வதுடன், அவை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றமையால், மாற்றமடைந்து செல்லும் உலக நாடுகளுக்கமைய நாமும் மாற வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக அமைந்துள்ளது.

அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின், எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் பொருத்தமற்றவர்களாக மாறிவிடுவோம். எதிர்காலத்துக்கு தயாராகவுள்ள வங்கி என்பதற்கான ஒரு அடிப்படை செயற்பாடாக இது அமைந்துள்ளது. 

Comments