பொன்டெரா நிறுவனத்தின் சிறந்த திறமையாளர்களுக்கு கௌரவம் | தினகரன் வாரமஞ்சரி

பொன்டெரா நிறுவனத்தின் சிறந்த திறமையாளர்களுக்கு கௌரவம்

 

பொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீலங்கா ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, பாற்பண்ணை கூட்டாண்மை பன்முகத்தன்மையை கொண்டாடும் வகையில், பொன்டெரா இன்ஃபினிட்டி விருதுகள் 2017இல், நிறுவனத்தின் திறமையான ஊழியர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

அங்கர் நாமத்தின் உரிமையாண்மையை கொண்டுள்ள பொன்டெரா நிறுவனம், இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

இலங்கையை ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாடாக திகழச்செய்வதற்கு நிறுவனத்தின் ஊழியர்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இதற்காக தமது விநியோக தொடரில், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் முதல், விற்பனை அதிகாரிகளிலிருந்து பாற்பண்ணையாளர்கள் வரை அணியாக இணைந்து செயலாற்றுகின்றனர்.

பொன்டெரா பிரான்ட்ஸ் லங்கா மனித வளங்கள் பணிப்பாளர் தினுஷா ஜயமான்ன கூறுகையில், முதலாவது பொன்டெரா இன்ஃபினிட்டி விருதுகள், உண்மையில் மக்களுக்காக மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாக அமைந்துள்ளது” என்றார்.

“எமது வியாபாரத்தில் நாம் சிறந்த திறமைசாலிகளை கொண்டுள்ளோம், அவர்களின் கடுமையான உழைப்பு, சாதனைகள் ஆகியவற்றை கௌரவிப்பதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது” என்றார்.

மொத்தமாக 22 விருதுகள் இந்நிகழ்வில் வழங்கப்பட்டிருந்தன. வியாபாரத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இரவின் பெருமைக்குரிய விருதான சம்பியன் ஃபங்ஷன் விருதை விற்பனை அணி சுவீகரித்திருந்தது.

ஜயமான்ன தொடர்ந்து தெரிவிக்கையில், “எமது ஆர்வமுள்ள, பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட விற்பனை நிபுணர்கள் நாட்டில் காணப்படும் சிறந்த அணியாக காணப்படுகின்றனர். செயற்பாட்டை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில், அவர்கள் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இதனூடாக விற்பனையை ஒரு விஞ்ஞானமாக மாற்றியுள்ளனர்” என்றார். 

Comments