புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பலை தணிந்துள்ளது | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பலை தணிந்துள்ளது

புதிய அரசியலமைப்புப் பணிகள் குறித்து பெரும்பான்மையின அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழிநடத்தல் குழுவிற்கு வெளியில் இருந்திருந்தால், இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்காது" என்கிறார் அமைச்சர் மனோ கணேசன்.

தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்று எட்டப்படாவிட்டால், தமிழ் மக்களை மட்டுமல்ல, இந்த நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமைச்சர். தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அன்று தந்தை செல்வா சொன்னார். தாம் அதற்கும் ஒருபடி மேலே சென்று இந்தக் கருத்தைச் சொல்வதாக மனந்திறந்து பேசுகிறார் அமைச்சர்.

அமைச்சர்களைக் குறித்த நேரத்தில் சந்திக்க வேண்டும்! சில நிமிடங்கள் பிந்தினாலும் பிடிக்க முடியாது. அந்தளவிற்கு வேலைப்பளு என்பார்கள். ஆனால், மாலை ஐந்து மணியாகியும் தனது செயலாளர், உத்தியோகத்தர் குழாத்துடன் முக்கிய சந்திப்பை நடத்துகிறார் அமைச்சர் மனோ கணேசன். அத்துணைப் பளுவிற்கு மத்தியிலும், எந்தக் கிலேசமும் இல்லாமல் அறுத்துரைத்து தனது ஆழமான அரசியல் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

"அரசியலமைப்பு தொடர்பாக இடைக்கால அறிக்ைக சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அஃது இடைக்கால அறிக்ைகயா அல்லது புதிய அரசியலமைப்பா என்பதைப் பற்றி குழப்பம் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் பௌத்த தேரர்களின் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், வரைபு அல்ல. இடைக்கால அறிக்ைகதான் என்பதை நாம் நிரூபித்திருக்கின்றோம். அதனை மறுக்க முடியாத நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம் என நான் நினைக்கின்றேன். ஆரம்பத்தில் இருந்த எதிர்ப்பலைகள் தற்போது தணிந்துவிட்டன.

அதுமட்டுமல்ல, கடந்த 2006ஆம் ஆண்டில் ஜுலை மாதம் என நினைக்கின்றேன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைத்திருந்த சர்வ கட்சிக் குழுவிற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக விற்பன்னர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார். அந்தக் குழுவில் அவர் கூறிய விடயங்களைப் பல இடங்களில் நாம் எடுத்துரைத்திருக்கின்றோம். பல சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அது வெளியாகியிருந்தது.

அதில் அவர் சொல்லியிருந்த விடயம் என்னவென்றால், கடந்த காலங்களில் ஏற்படுத்திக்ெகாள்ளப்பட்ட குறிப்பாக பண்டா செல்வா ஒப்பந்தத்திலிருந்து அதுகால வரையிலான அனைத்து ஒப்பந்தங்களையும் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு சர்வகட்சிக் குழுவிற்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று திரு.மஹிந்த ராஜபக்ஷவே கூறியிருந்தார். பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தில், வடக்கு, கிழக்ைக மூன்று பிராந்தியங்களாகப் பிரிக்க வேண்டும் என்றும் விரும்பினால், ஒன்று மற்றொன்றுடன் இணைந்து கொள்ளலாம் என்றுகூட பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது.

மங்கள முனசிங்கவின் அறிக் ைகயிலும், 2000ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசியல் வரைவிலும் இவ்வாறான பரிந்துரைகள் சொல்லப்பட்டுள்ளன. திரு.மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இவ்வாறான பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பொன்றுக்கான இறுதி முடிவுக்கு வருவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கூற முடியுமானால், தற்போதைய இடைக்கால அறிக் ைகயில் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்றும் சமஷ்டி தீர்வு வேண்டும் என்றும் இலங்கை ஒரு மதச் சார்பற்ற அரசியலமைப்பு உருவாக வேண்டும் என்றும் கோரிக்ைக விடுப்பதற்கான நியாயமான உரிமை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு இருக்கின்றது. அது முடிந்த முடிவு அல்ல. ஆகவே, அதனை வைத்துக்கொண்டு நாட்டைத் தீவைத்துக்ெகாளுத்துவதற்கு மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் முயல்வதற்கு இடமளிக்க முடியாது."

"நாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டு அரசியலமைப்பிலும் தமிழ்த் தரப்பு சம்பந்தப்படவில்லை என்று அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல கூறியிருக்கிறார். முதற்தடவையாக அரச தரப்பிலிருந்து இவ்வாறான ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது புதிய அரசியலமைப்புக்கான சாதகமான சூழலைத் தோற்றுவித்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தச் சூழலைத் தமிழ்த்தரப்பு சரியாகப் பயன்படுத்தி வருகிறது என நினைக்கிறீர்களா?"

" உண்மையில் உங்களது கேள்வி ஒரு சிறப்பான அரசியல் விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்ட கேள்வி என நினைக்கின்றேன். அதற்கு எடுகோலாக அமைச்சருடைய கருத்தையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பொருத்தமானது. முதலாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும்கூட அவர்கள் இடைநடுவில் எழுந்து சென்றுவிட்டார்கள், வடகிழக்குத் தமிழ்த்தலைவர்கள்.

அதனால், தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமல்தான் அந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து அந்த அரசியலமைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை நடைபெற்றது. அதில் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் வாதம் பற்றிப் புத்தகம்கூட வெளியானது. அதற்கு மு.திருச்செல்வம் பாரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். தமிழரின் தொடர்பு இல்லாமல்தான் அந்த அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது. 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு அதனைவிட மோசமானது.

திரு.ஜே.ஆர்.ஜயவர்தன தனது நண்பர்களுடன் சேர்ந்து கலந்தாலோசித்து தனக்கிருந்த மூர்க்கத்தனமான பெரும்பான்மையைப் பயன்படுத்தி, சிங்களத் தரப்பினரைக்கூடக் கருத்திற்கொள்ளாமல் நிறைவேற்றினார்.தமிழர்களைச் சொல்வதைவிடச் சிங்களத் தரப்பினரையும் அவர் கலந்தாலோசிக்கவில்லை.

இப்போது முதன் முறையாக இந்த அரசியலமைப்பில் தமிழ் மக்களும் பங்குபற்றியிருப்பது ஒரு ஜனநாயக ரீதியிலான நடைமுறை என்று நினைக்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றிருக்கின்றார்.

இதுபற்றி எனக்கு முன்னால் உரை நிகழ்த்திய திரு.மஹிந்த ராஜபக்‌ஷ, அது பொருத்தமற்றது என்றும் தங்களுடைய கட்சிக்ேக அதிக உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால், எனது உரையில் நான் அவருக்குப் பதில் அளித்தேன், இலங்கை இராச்சியம் என்ற வரையறைக்குள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வந்திருக்கின்றது. தனி நாடு என்ற வியூகத்திலிருந்து விலகி இலங்கை இராச்சியம் என்ற வரம்புக்குள் வந்திருப்பது பெரிய விடயம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மூலமாகச் சிங்கள மக்களுக்கு அந்தச் செய்தி தரப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை, சந்தர்ப்பத்தை அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவறிவிட்டது என்றே நினைக்கின்றேன். அந்த நேரத்திலேயே அதை எடுத்துக்ெகாண்டு நாடு முழுக்க சென்றிருக்க வேண்டும். மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதா இல்லையா என்பதைப் பற்றி மாறுபாடான கருத்துகளைச் சொல்லிக் ெகாண்டு இருக்கிறார்கள். ஒரு நாள் சந்திக்கப் போகிறோம் என்கிறார்கள். மறுநாள் சந்திப்பதில்லை என்கிறார்கள்.

இதை அன்றே செய்திருந்தால் தடுமாற்றத்திற்கு இடமிருந்திருக்காது. நாங்கள் தனிநாட்டுக் கோரிக்ைகயைக் கைவிட்டுவிட்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றிருக்கின்றோம் என்று சிங்களத் தலைவர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் அன்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார்கள் என்றே கருதுகிறேன்.

என்னைப் பொறுத்த வரை இந்தப் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வந்திருக்கக்கூடாது என்று நினைக்கின்றேன். கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுந்தான் சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டன. எனவே, நாங்கள் வெளியே இருந்துகொண்டு ஆதரிக்கின்றோம்.

நீங்கள் அனைத்துத் தரப்புமாகச் சேர்ந்து எங்களுக்கான தீர்வைத் தருவதற்கான ஓர் அரசியலமைப்பை எழுதித் தாருங்கள் என்று கேட்டிருக்க வேண்டும். எமக்கு நேரடியாக அல்லாமல், அதனை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக அல்லது சர்வதேச சமூகத்தின் ஊடாகத் தாருங்கள் நாங்கள் சாதமாகப் பரிசீலிக்கின்றோம், அரசியலமைப்பு வரையும்போது சேர்ந்துகொள்கின்றோம் என்று கூறியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லியிருந்தால், பேரம்பேசும் சக்தி நமக்கு எங்கோ போயிருக்கும்.

இன்று நான் சிங்களத் தரப்பினருக்கு மத்தியில் சென்று மீண்டு வரும்போது, இந்த அரசியலமைப்பைச் சுமந்திரனும் ஜயம்பதியும் தங்களுக்கு ஏற்ற வகையில் எழுதி வைத்து விட்டார்கள் என்று குறை சொல்கிறார்கள். கூட்டமைப்பினர் வழிநடத்தல் குழுவிற்கு வராமல் இருந்திருந்தால், இந்தக் குற்றச்சாட்டுக்கு இடமிருந்திருக்காது. ஜயம்பத்தி பிரச்சினையில்லை. அவர் இடதுசாரியாக இருந்தாலும் ஒரு சிங்கள பெரும்பான்மை ஸ்தாபனத்தைச் சார்ந்தவர். நாங்கள் வடக்கு, கிழக்கிற்கு வெளியே இருப்பதால், எங்களை யாரும் குற்றஞ்சாட்ட முடியாது. கூட்டமைப்பு வந்ததுதான் சிக்கலாக இருக்கிறது.

அதனை நாங்கள் சாணக்கியமாக அணுகியிருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்குக் கூட்டமைப்புப் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் ஒத்துழைத்து வருகிறது. அது நல்ல விடயம். இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றாவிட்டால், உள்ளே வருவதற்கு மஹிந்த ராஜபக்‌ஷ கதவருகில் காத்துக்ெகாண்டு இருக்கிறார். கதவைத் தட்டிக்ெகாண்டு அல்ல, கதவை உடைத்துக்ெகாண்டு வருவதற்கும் அவர் தயாராக இருக்கிறார். எனவே, முட்டாள்தனமாக முடிவுகளை எடுத்து இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் நிலையை ஏற்படுத்தக்கூடாது.

தொடர்ந்து இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முடிவு தொடர்பில் யாரும் அவர்களைக் குற்றஞ்சாட்ட முடியாது. அதேநேரம், வழிநடத்தல் குழுவிற்கு வெளியில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அரசியலமைப்புப் பேரவையில் ஒன்றிணைவதென்பது வேறு விடயம். ஏனெனில், வழிநடத்தல் குழு என்பது வேறு. அரசியலமைப்புப் பேரவையின் மூலம் 21பேர் தெரிவுசெய்யப்பட்டு வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு வேறு ஆறு உப குழுக்களை நியமித்தது. இப்போது அந்தக் குழுக்களின் பணிகள் நிறைவுற்றுக் கடையை மூடிவிட்டார்கள். இப்போது வழிநடத்தல் குழு மட்டுமே இருக்கின்றது.

அந்தக் குழுவின் பரிந்துரை அறிக்ைக அரசியலமைப்புப் பேரவைக்கு வரும்போது விவாதிக்க முடியும்.அப்படி இருந்திருந்தால் நிலைமை முன்னேற்றகரமாக இருந்திருக்கும். அநாவசியமான குற்றச்சாட்டு இருந்திருக்காது. மேலாண்மைவாதிகள் தர்க்க ரீதியாகவேனும் வாதிடும் சூழலும் ஏற்படாது என்பது எனது தாழ்மையான கருத்து."

"சிங்களத் தரப்பினர் மத்தியில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதைப்போல், தமிழ் மக்கள் மத்தியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக முயற்சிகளை எடுத்திருக்கிறீர்களா?"

"இல்லை, இல்லை.. (சிரிக்கிறார்) இது சம்பந்தமாக முயற்சி எடுத்துத் தோல்வியடைந்துவிட்டேன். இது விடயத்தில் நான் மனம் நொந்த நிலையில் வேதனையடைந்திருக்கின்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தெரியும் சில மாதங்களுக்கு முன்னர், நான் ஓர் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டிருந்தேன். அதாவது, பாராளுமன்றத்தில் இருக்கின்ற ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் என்ற பேதமில்லாமல், வடக்கு கிழக்கு, அதற்கு வெளியில் இருப்பவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்துத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் என்ற ஓர் அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்திருந்தேன்.

அமெரிக்க காங்கிரஸில் அவ்வாறு உள்ளது. குடியரசு, தொழில் கட்சி என்ற பேதமில்லாமல், கருப்பினத்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஓர் அமைப்பாகச் செயற்படுகின்றனர். அவ்வாறான ஓர் யோசனையையே நான் முன்வைத்திருந்தேன். அஃது அரசியலுக்காகவோ தேர்தலில் போட்டியிடவோ அல்ல. அவ்வாறு கூட்டணி அமைத்துப் போட்டியிடவும் முடியாது.

அரசியலைத் தனியாகச் செய்துகொள்வோம். பொதுப்பிரச்சினையில் ஒன்றாகச் செயற்படுவோம் என்று நினைத்தேன். அவ்வாறு ஒரு குழுவாக ஜனாதிபதியையும் பிரதமரையும் மட்டுமல்லாது மகா சங்கத்தினரையும் சந்தித்து எமது கூட்டுச் செயற்பாட்டை உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் காத்திரமாக முன்னெடுக்கலாம் என்று எண்ணினேன். அந்த யோசனைக்கு எல்லோரும் ஆதரவளித்தார்கள். ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த உறுபினர்கள் ஆதரவளித்தார்கள். அங்கயன் இராமநாதன் ஆதரவளித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள பத்துப்பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவளித்தார்கள்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆதரவளித்தார். தம்பி, இது நல்ல விடயம். நாங்கள் பேசி முடிவெடுப்போம். தைரியமாக இருங்கள் என்று ஊக்கப்படுத்தினார். பொதுப்பிரச்சினையை ஒன்றாக அணுகுவோம் என்று சொன்னார். ஆனால், அதற்குப்பிறகு அந்த விடயம் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறு ஒரு கூட்டணி உருவாகுமாக இருந்தால், எங்கள் தமிழர் முற்போக்கு கூட்டணியில் உள்ள இராதாகிருஷ்ணன் அவர்களை இணைத் தலைவர்களில் ஒருவராக நியமிப்பதற்கான இணக்கத்தை எங்கள் கூட்டணியின் கூட்டத்தில் நானே பிரேரித்து அதற்கு அங்கீகாரத்தையும் பெற்றுக்ெகாண்டிருந்தேன். துரதிர்ஷ்ட வசமாக தமிழர் பொதுக்கூட்டணி விடயம் முன்னெடுக்கப்படவில்லை.

இஃது ஏன் நடைபெறவில்லை என்று கேட்டுக்ெகாண்டிருக்கவில்லை. என்றாலும், என் மனத்தை வேதனைப்படுத்திக்ெகாண்டிருக்கும் ஒரு விடயமாகவே இஃது இருக்கின்றது. நாம் ஒரு முயற்சியை மேற்கொள்ளும்போது அதற்கு மற்றைய தரப்பிலிருந்தும் சாதகமான சமிக்ைஞ கிடைக்க வேண்டும். ஒரு கையைத் தட்டுவதால் ஓசை எழாது! இதுதான் உண்மை."

"புதிய அரசியலமைப்பு பற்றித் தமிழர் தரப்பிலும் பல்வேறுவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதில் தீர்வு கிடைக்காது; கண்துடைப்பு என்றெல்லாம் சொல்கிறார்கள். நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்ைக உங்களுக்கு இருக்கின்றதா?

இதற்கான பதிலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

விசு கருணாநிதி 

Comments