உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வெளியானது வர்த்தமானி | தினகரன் வாரமஞ்சரி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; வெளியானது வர்த்தமானி

உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்ைகயைக் குறிப்பிடும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

2017/11/02ஆம் திகதியிடப்பட்டதும் 2043/56 இலக்கமுடையதுமான இந்த விசேட வர்த்தமானியின் சிங்கள வடிவம் காலையிலும் தமிழ் வடிவம் மாலையிலும் வெளியானதுடன் ஆங்கில வடிவம் நாளையும் நாளை மறுதினமும் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு மொழியிலும் தலா 220 பக்கங்களைக்ெகாண்டு இந்த வர்த்தமானி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சிடமிருந்து கடந்த இரண்டாம் திகதி கிடைக்கப்பெற்றபோதிலும், ஒப்பு நோக்குவதற்காக வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டியிருந்ததாகத் தெரிவித்த அரசாங்க அச்சகர், இலக்கம் 2043/56 ஐக்ெகாண்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியும் வெளியாகும் என்றும் குறிப்பிட்டார்.

அதேநேரம் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இவ்வாரம் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே அறிவித்திருந்ததற்கிணங்க, எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்படும் என்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார். வேட்பு மனு கோரல் பணிகள் நிறைவடைந்ததும் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நமது நிருபர்

 

  

 

Comments