நாடு முழுவதும் 4 மணி நேர திடீர் சுற்றிவளைப்பு | தினகரன் வாரமஞ்சரி

நாடு முழுவதும் 4 மணி நேர திடீர் சுற்றிவளைப்பு

நாடு முழுவதுமுள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் சுமார் 16,362 பொலிஸாரின் பங்களிப்புடன் 4 மணிநேரம் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சுற்றி வளைப்பின்போது 1806 பேர் கைதாகியுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புக்கமைய நடத்தப்பட்ட இந்த அதிரடி சுற்றிவளைப்பு தேடுதலின் போது 1806பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இச் சுற்றிவளைப்பின் போது பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகத்தின் பேரில் 962 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 962 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 86 பேரும் கைதாகியுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

வாகன அனுமதிப்பத்திரமின்மை, சாரதி அனுமதிப்பத்திரமின்மை, பதிவுகள் இன்மை போன்ற போக்குவரத்து குற்றங்களுக்காக 5,744 பேருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்ட விரோத மதுபான விற்பனை மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக 948 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 11.00 மணிக்கு சுற்றிவளைப்புகள் ஆரம்பமாகின. அதிகாலை 3.00 மணி வரை நடைபெற்ற இச்சுற்றிவலைப்பில் இவர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது.

சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஏனையோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் பொலிஸ் தலையகம் தெரிவித்தது. 

Comments