வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; வடக்கு கிழக்கில் அடை மழை | தினகரன் வாரமஞ்சரி

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; வடக்கு கிழக்கில் அடை மழை

இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தென்மேற்கு தாழமுக்கம் காரணமாக வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழை காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் கரையோர பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வடமாகாணங்களின் சில பகுதிகளில் உள்ளிட்ட பெரும்பாலான  பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்எனவும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலான கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இடிமின்னலிருந்து பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் அவதானமாக இறுக்குமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments