ஊருக்ேக உபதேசம் எனக்கல்லவே! | தினகரன் வாரமஞ்சரி

ஊருக்ேக உபதேசம் எனக்கல்லவே!

யாருக்கும் அறிவுரை சொல்றது எளிது! அதை அப்பிடியே கடைப்பிடிக்கிறதுதான் கஷ்டம். காலையிலை கண்விழிச்சதிலை இருந்து படுக்ைகக்குப் போகும் வரைக்கும் நமக்குப் பலரும் பலவிதமாக அறிவுரை சொல்வாங்க. சிலபேர் அந்த அறிவுரைகளைக் கேட்டு நடப்பாங்க. சிலபேர் இவர் என்ன சொல்றது, நான் என்ன கேட்குறது? எண்டிட்டுப் பேசாமல் இருப்பாங்க.

இப்ப கொஞ்ச நாளா நண்பர்கள் சிலபேர் தேத்தண்ணி குடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க. ஏன் எண்டு கேட்டால், ரீ குடிக்கிறது சரியில்லையாம். ஞாபக மறதி வருகுதாம். நாங்கள் குடிக்கிற தேத்தண்ணி உள்ளுக்குள்ளால போய் கறலா படிஞ்சிடுமாம். இப்ப கறல் பிடிச்சா என்ன, பிடிக்காட்டா என்ன எண்டு கேட்டால், ஒண்டும் சொல்லுறாங்கள் இல்லை. ஆரோ நல்லா மனத்திலை பதிய வைச்சிட்டாங்க. நல்ல விசயம்தான்.

விளையாட்டுத்துறையில் பயிற்சி அளிக்கிற ஒரு நண்பரும் இதைச் சொல்லியிருக்கிறார். ரீ கதைதான். தேநீர், கோப்பி குடித்தால், உடல் நலம் கெடும் என்று அவர் சொல்றார். அண்மையிலை சீனாவிற்குப் போய் வந்த ஒரு நண்பரும் சொன்னார், அங்கு கிறீன் ரீ தான் அதிகம் குடிக்கிறாங்களாம். பால் தேநீர் குடிப்பது இல்லையாம்.

நடிகர் சிவகுமாரும் அப்பிடித்தான் சொல்றார். அவர் ரீ கோப்பி குடிச்சு 57 வருஷமாச்சுதாம். ரீ குடிக்காட்டால், செத்தா போயிடுவாய்? என்று கேட்கிறார் அவர். அதுதான் அவரை மார்க்கண்டேயன் என்று சொல்கிறார்கள்.

சில பேரைப் பார்த்தீங்கள் என்றால், பொய்யைக்கூட நம்புறமாதிரி சொல்லு வாங்கள். அப்பிடி ஒரு திறமை. ரெண்டு பேருக்கிடையிலை மூட்டி விடுறதுக்கு எண்டாலும் இல்லாதது பொல்லாதது எல்லாத்தையும் வடிவாச் சொல்லி அவிப்பாங்கள். அதைக் கேட்டிட்டுச் சண்டை பிடிச்சமெண்டால் நாங்கள்தான் நல்ல புத்திசாலி! அவர் இப்ப வேற சோலியிலை இருக்கார்.

எனக்குத் தெரிஞ்ச ஒரு பத்திரிகைக்காரர் இருந்தார், இப்போதும் இருக்கிறார். சதாவும் மற்றவங்களபத்தித்தான் கதை. தன்ரை விசயத்தை எதையும் பார்க்க மாட்டார். முப்பது வருஷத்திற்கும் மேல "எக்ஸ்பீரியன்ஸ்" கையிலை ஒரு தொலைபேசி விபரக்குறிப்பும் வைச்சிருக்க மாட்டார். அந்தளவிற்கு ஞாபக சக்தி! அப்படியே மறந்திட்டென்றால், தம்பி அந்த நம்பரைக் கொஞ்சம் குடுங்க! எண்டு கேட்பார் என்கிறார் நண்பர். அவருக்கு யாரைப்பத்தியாவது கதைக்க இல்லை என்றால், நித்தி ரையே வராதாம். இவரும் அப்படித்தான். ஒவ்வொரு கிழமையும் யாரைப்பற்றியாவது சொல்வார். மத்தவங்களுக்கு அறிவுரை சொல்வார். பிடிக்காத ஆள் என்றால் கலிசான் போட்ட நாய் என்பார்!

அவர் இருக்கட்டும், நமது பிரச்சினை அவர் இல்லை. உபதேசம்!

மற்ற ஆக்களுக்கு உபதேசம் சொல்றமாதிரி நடந்துகொள்ற ஆக்கள் இருக்கிறாங்களா? என்று பார்த்தால், குறைவு என்று தான் தோணுது.

ஆன்மிக நுண்ணறிவு என்பது, மற்றவங்களுக்கு முன்னாலயும் எவரும் இல்லாத நேரமும் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடப்பதுதான் என்கிறார் முனைவர் இறையன்பு. ஆன்மிகம் என்றால், பக்தியாக இருப்பது அல்லது சாமி கும்பிடுறது எண்டு சிலர் நினைச்சுக்ெகாண்டு இருக்கிறாங்கள். ஆன்மிகத்திற்கும் சாமி கும்பிடுறதுக்கும் சம்பந்தமே இல்லை. ஆன்மிகம் என்பது ஒழுக்கமாக இருப்பது. அதாவது மற்றவங்களுக்கு அறிவுரை சொல்லிக் ெகாண்டிருப்பது அல்ல. சிலர் ஊருக்ேக உபதேசம் செய்வார்கள், ஆனால், தாம் அப்பிடி நடந்துகொள்ள மாட்டார்கள்.

ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு, தாங்கள் இஷ்டம் போல நடப்பவர்களுக்கு கொடிய நரகம் காத்திருக்கிறது என்று நபிகள் நாயகம் எச்சரிச்சிருக்கிறார்.

ஊருக்கு அறிவுரை சொன்னவன் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவானாம். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். பிறகு அக்குடலை எடுத்துக் கொண்டு அவன், கழுத்தை சுற்றுவதைப் போல நரகத்தில் சுற்றுவானாம்.

இதைப் பார்த்துவிட்டு அவனிடம் அறிவுரை பெற்றவர்கள், நீ நல்லவனாகத்தானே இருந்தாய். நல்லதைத்தானே எங்களுக்குப் போதித்தாய். பிறகு ஏன் உனக்கு இந்தக் கதி ஏற்பட்டது என்று கேட்பார்களாம்.

அதற்கு அவன், நான் உங்களுக்கு நல்லதைத்தான் போதித்தேன். ஆனால், நான் அதன் அருகில் கூட சென்றதில்லை. உங்களை தீமையில் இருந்து தடுத்த நான், அதையே செய்து கொண்டிருந்தேன் என்று பதில் சொல்லும் நிலை ஏற்படும் என்கிறார் நபிகள்.

ஊருக்கு உபதேசம் செய்வது எளிது. ஆனால் அதனை கடைப்பிடிப்பது கடினம். எனவே நல்லதை கடைபிடித்தால் மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தின் அன்பைப் பெற முடியும் என்று ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லுகின்ற பிரபஞ்சம்தான் கடவுள். இது பலபேருக்குத் தெரியாது.

மருத்துவர் சொன்னால் எதையும் கேட்க மாட்டாத நாம் ஞானி சொன்னால் கேட்பதற்குத் தயாராகத்தானே இருக்கிறம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆற்றுப்படுத்தல் என்பது இன்று இன்றியமையாததாகி இருக்கிறது. அதனாலை, நாங்கள் நுண்ணறிவுடன் இருந்துகொண்டு மற்றவங்களுக்கு அறிவுரை சொல்றதுதான் நல்லது!

Comments