அவுஸ்திரேலிய தூதரக அனுசரணையில் Tech 4 வர்த்தக மாநாடு | தினகரன் வாரமஞ்சரி

அவுஸ்திரேலிய தூதரக அனுசரணையில் Tech 4 வர்த்தக மாநாடு

இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து, அவுஸ்திரேலியத் தூதரகம் நடத்திய டெக் 4 வர்த்தக மாநாட்டை அக்டோபர் மாதம் 30 ஆம் 31 ஆம் திகதிகளில் நடத்தியது. வர்த்தகத்தை மேலும் திறம்பட நடத்தக்கூடிய தொழில்்நுட்ப வரிசைக்கே இம்மாநாட்டில் முன்னுரிமையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், பிறைசி ஹச்சிசன், “ தொழில்நுட்பத்தை இலகுவில் உள்வாங்கிக் கொள்ளும் நாடாக இலங்கை உள்ளது. அத்துடன் தொழில்நுட்பம் வழங்கக் கூடிய போட்டித்தன்மைகளை விரைவக உள்வாங்கும் தன்மையினையும் கொண்டிருக்கின்றது. அது புத்திசாலித்தனமானது மாத்திரமல்ல. அது அத்தியாவசியமானதும் கூட. டிஜிற்றல் சீர்குலைவின் மூலம் உலகளாவிய ரீதியி்ல் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகின்றது.

பாரம்பரிய தொழிற்றுறைகள் ஓரிரவில் தலைகீழான மாற்றம் பெறுகின்றன. போட்டித்தன்மை மிக்க உலகின் சவால்களை எதிர்கொள்ள, தொழில் நுட்பத்திற்கேற்ப எம்மை இற்றைப்படுத்தக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. இவ்வாறான நவீன தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்” பல்வேறுபட்ட வர்த்தகத் துறைகளைச் சேர்ந்த உயர்் மட்ட அதிகாரிகளும், வர்த்தகப் பிரமுகர்களும்் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அவர்களுள் அவுஸ்த்திரேலிய விஞ்ஞான முகவர் நிலையத்தினைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களின் அளிக்கையும், 1-Stop Connections துறைமுக வேலைகளை உச்சளவில் பெற்றுத்தர டிஜிற்றல் சேவைகளைப் பயன்படுத்திய அவுஸ்திரேலியாவின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனம்) இன் அளிக்கையும் இடம்பெற்றது.அத்துடன் சர்வதேச அமைப்புகளான உலக வங்கி மற்றும் Global Trade என்பனவும் கலந்து கொண்டன.

இடைத்தரகர் இல்லாமலேயே கொடுக்கல் வாங்கல்களைச் சாத்தியப்படுத்தும் தடுப்புச் சங்கிலித் தொழில்நுட்பம் பற்றியே இம்மாநாடு அதிகளவில் ஆராய்ந்தது. இத்தொழில்நுட்பமானது திருட்டுகளுக்கு எதிரானது. விநியோகச் சங்கிலிகளில் தடுப்புச் சங்கிலித் தொழில்நுட்பமானது, தகவல் பரிமாற்றம் மற்றும்் ஸ்டிரீம்லைன் செயற்பாடுகளை கணிசமான அளவில் முன்னேற்றுகின்றது. இதன் மூலம் விநியோகச் சங்கிலியானது முன்னேற்றமடைவதுடன் செலவினையும் குறைக்கின்றது. 

Comments