கண் மற்றும் இரத்ததான முகாம்களுடன் அனுஷ்டிக்கப்பட்ட BMICH ஸ்தாபகர் தினம் | தினகரன் வாரமஞ்சரி

கண் மற்றும் இரத்ததான முகாம்களுடன் அனுஷ்டிக்கப்பட்ட BMICH ஸ்தாபகர் தினம்

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மன்றம் (பி.எம்.ஐ.சி.எச்) அண்மையில் இரத்த மற்றும் கண் தான முகாம்கள் மற்றும் மத அனுஷ்டானங்களுடன் ஸ்தாபகர் தினத்தை நினைவுகூர்ந்திருந்தது. நன்கொடையளிக்க வந்திருந்தவர்களுக்கு இலங்கை கண் வங்கி இலவச மூக்குக் கண்ணாடிகளை வழங்கியிருந்தது.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 58ஆவது மறைவு தினம் மற்றும் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் 17வது மறைவு தினத்தையும் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிப்புமிக்க நன்கொடை நடவடிக்கைகளில் தேவையுடைய பெரும் எண்ணிக்கையானவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இது சந்தேகத்துக்கு இடமின்றி உண்மையான விளைவினை ஏற்படுத்தியிருந்தது.

“எமது ஸ்தாபகர்கள் இலங்கைக்கு மாத்திரம் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை, முழு உலகத்துக்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். எமது இந்த உயர்ந்த இரத்த மற்றும் கண்தான முகாம் செயற்பாடுகள் அவர்களை கெளரவப்படுத்த தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நம்புகின்றோம்” என பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பணிப்பாளரும் நிறைவேற்று அதிகாரியுமான சுனில் திசாநாயக்க தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான நலன்விரும்பிகளும், பி.எம்.ஐ.சி.எச் பணியாளர்களும் இந்த தான முகாம்களில் கலந்துகொண்டிருந்ததுடன், முன்னெப்பொழுதும் இருந்திராத வகையில் இந்த நன்கொடையின் நோக்கம் அமைந்திருந்தது.

அர்ப்பணிப்பாக செயற்பட்ட இலங்கையின் இரண்டு முக்கிய தேசிய நபர்களான, இலங்கையின் நான்காவது பிரதமரும், சர்வதேச அரசியலாளருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் உலகத்தின் முதலாவது பெண் அரசதலைவருமான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் நினைவாக இவை நடத்தப்பட்டமை முக்கியமானதாகும்.

இரத்த தானம் பி.எம்.ஐ.சி.எச் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண் தானம் பி.எம்.ஐ.சி.எச் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மறைவு தினத்தை முன்னிட்டு மதசடங்குகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

Comments