‘Seeds for the Future’ திட்டத்தின் 2 ஆம் கட்டமாக 10 இலங்கை மாணவர்கள் சீனா விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

‘Seeds for the Future’ திட்டத்தின் 2 ஆம் கட்டமாக 10 இலங்கை மாணவர்கள் சீனா விஜயம்

முன்னிலை வகிக்கும் சர்வதேச தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்ப நிறுவனமான Huawei, கடந்த ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட தனது Seeds for the Future’ என்ற Huawei இன் சர்வதேச வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் மீண்டும் ஒரு முறை அணிசேர்ந்துள்ளது.

உள்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்பத்துறையில் உள்ள திறமைசாலிகளுக்கு உதவும் வகையில் பல்கலைக்கழகங்களிலிருந்து தெரிவு செய்யப்படுகின்ற 10 இலங்கை மாணவர்கள் Huawei இன் முழுமையான அனுசரணையின் கீழ் தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்பம் மற்றும் சீன கலாசாரம் தொடர்பான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் கல்விச் சுற்றுலாவிற்கு சீனா செல்லும் வாய்ப்பினை வழங்குவதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

இக்கல்விச்சுற்றுலா 2017 நவம்பர் 4 முதல் நவம்பர் 18 வரை இரு வாரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் சீனாவின் பாரம்பரிய கலாசாரத்தை அனுபவிக்க இடமளிப்பதுடன், பெய்ஜிங் நகரில் முதலாவது வாரத்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பெய்ஜிங் மொழி மற்றும் கலாசார பல்கலைக்கழகத்தில் சீன எழுத்து மற்றும் ஓவியம் சார்ந்த விடயங்களில் ஈடுபடவுள்ளனர்.

5G, cloud computing போன்ற நவீன தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களையும் இந்த மாணவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், சீனாவின் சிலிக்கன் வலி எனப்படுகின்ற சென்சென் நகரில் அமைந்துள்ள Huawei தலைமையலுவலகத்திலுள்ள அதி நவீன ஆய்வுகூடங்களின் நடைமுறைகளை நேரடியாகக் கண்டு, அனுபவிக்கும் வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேலும் வலுவூட்டி, அதன் மூலமாக பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்பத் துறையில் முன்னேறத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு கல்வி ரீதியிலான ஆதரவை வழங்குவதே Huawei இன் நோக்கமாகும்.

அண்மைய ஆண்டுகளில் வாடிக்கையாளர் தீர்வுகள் புத்தாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த அனுபவ மைய ஏற்பாட்டு வசதியின் அறிமுகத்தினுௗடாக இலங்கையில் தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்பத்தை வலுவூட்டுவதற்கான பாதையை ஏற்படுத்துவதற்கு Huawei காரணமாக இருந்துள்ளதுடன், வலுவான சர்வதேச தகவல் மற்றும் தொடர்பாடல்கள் தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது. 

Comments