Fouzul Hameed வழங்கும் 'Curio City' Envoy Concept 2018 கண்காட்சி இன்று கொழும்பில் | தினகரன் வாரமஞ்சரி

Fouzul Hameed வழங்கும் 'Curio City' Envoy Concept 2018 கண்காட்சி இன்று கொழும்பில்

ஆடவர்களுக்கான இலங்கையின் நிபுணத்துவமிக்க முன்னணி ஆடையகமான ஹமீடியா, தனது வருடாந்த ஃபேஷன் கண்காட்சியின் ஐந்தாவது ENVOY CONCEPT 2018 நிகழ்வினை ஒழுங்குசெய்துள்ளது. இந்நிகழ்வானது curio city என்ற தொனிப்பொருளில் நகரவாழ்வுக்கு ஏற்ற விதத்தில் ஆண்களுக்கு, வசீகரத்தை ஏற்படுத்தவும் தனித்துவமான புதிய பாணியிலமைந்த ஃபேஷன் நடைமுறைகளை சீர்படுத்தவும் ஊக்குவிக்கவும் ஏற்றவிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் Down to Earth, Art in Loom, Contemporary, De Rigueur, GENZ, Prince of Wales மற்றும் Celebrate Life என ஏழுவிதமான ஆடை தயாரிப்பு வகைகளுடன் நாடுமுழுவதுமுள்ள ஹமீடியா கிளைகளில் பெற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்ட, பிரத்தியேக ஆடைகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

The Envoy நிகழ்வானது உலகெங்கிலும் உள்ள நவீன வகை ஆடைப்பாணிகளின் சங்கமிப்பாகவும் சர்வதேச தரத்திலமைந்த ஆண்களுக்கான ஆடைகளின் அறிமுகமாகவும், இலங்கையில் நடைபெறும் ஒரேயொரு சிறப்புவாய்ந்த ஆடைக்கண்காட்சியாகவும் அமைகின்றது. இந்த ஆண்டிற்குரிய 'CurioCity' தொனிப்பொருளானது அனைத்து விதமான வாழ்வியல் மற்றும் தொழில் பின்னணியில் உள்ள ஆண்களுக்கு ஃபேஷன் தொழில்துறையின் புதிய பாணியைப்பற்றி அறிவித்து, காலமாற்றத்திற்கு பொருத்தமான நவநாகரீகமான புதிய பாணியில் அமைந்த தரமான ஆடைகளை தேர்வுசெய்வதற்கான அறிவினையும் ஊக்குவிப்பினையும் ஏற்படுத்தும் விதமாகவும், ஆடைகளின் மூலம் அவர்களுக்கு சிறப்பான வாழ்வியல் தோற்றத்தையும் அனுபவத்தையும் கட்டியெழுப்பும் விதத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை கொழும்பு 3இல் அமைந்துள்ள Envoy Mansion இல் நடைபெறும் ஐந்தாவது நிகழ்வானது, Mr. England 2017/2018 ஆணழகன் பட்டம்வென்றவரும் Envoy London இன் லண்டன் தூதுவருமான ஜேக் எயர்ஸின; (Jack Eyers) முன்னிலையில் நடைபெறுகிறது. அவரோடு இணைந்து Mr. England 2017/2018 இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றவர்களான இரண்டாம் இடம்பெற்ற Jack Hesslewood (ஜாக் ஹெஸ்லுௗட்வுட்) மற்றும் மூன்றாம் இடம் பெற்ற Zac Oldershaw இருவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Envoy Concept 2018 நிகழ்வானது, நவநாகரீக பாணியும் நேர்த்தியும் நுட்பமான தன்மையும் உள்ளடக்கிய தனிச்சிறப்புவாய்ந்த பிரத்யேக ஆடைத்தயாரிப்புக்களை வழங்குகின்றது. 

Comments