உலகக்கோப்பை குழுப் பிரிவில் ஸ்பெயினுடன் இடம்பிடிக்கக் கூடாது | தினகரன் வாரமஞ்சரி

உலகக்கோப்பை குழுப் பிரிவில் ஸ்பெயினுடன் இடம்பிடிக்கக் கூடாது

ரஷ்யாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரின் குழுப் பிரிவில் ஸ்பெயின் அணியுடன் இடம்பிடிக்கக் கூடாது என மெஸ்சி விரும்புகிறார்

ரஷ்யாவில் அடுத்த வருடம் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.

ரஷ்யாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் அர்ஜென்டினா எப்படியாவது சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறது. குறைந்தது அரையிறுதி போட்டிக்காவது முன்னேறி விடவேண்டும் என்று நினைக்கிறது.

இதற்காக ஆர்ஜென்டினா, குழுப் பிரிவில் எளிதான அணியுடன் இடம்பெற வேண்டும் என்று மெஸ்சி விரும்புகிறார். ஆகவே, ஸ்பெயின் அணி குழுப் பிரிவில் இடம்பிடிக்கக்கூடாது. அந்த அணி மிகவும் கடினமான எதிரி என்று மெஸ்சி தெரிவித்துள்ளார். 

Comments