ஏழு ஆண்டுகளில் 10 பயிற்றுவிப்பாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

ஏழு ஆண்டுகளில் 10 பயிற்றுவிப்பாளர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியை கடந்த 7 ஆண்டுகளில் மொத்தமாக 9 பயிற்சியாளர்கள் 10சந்தர்ப்பங்களில் பயிற்றுவித்துள்ளனர் என்பது ஆச்சரியப்பட வைக்கும் விடையமாகவுள்ளது.

இலங்கை அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் வெகுவிரைவில் நியமிக்கப்படவுள்ள நிலையில்,அவர் இலங்கையின் 11 வது பயிற்சியாளராக மாறவுள்ளார்.கடந்த 2011 ம் ஆண்டு முதல்கொண்டு இதுவரை இலங்கை அணியை பயிற்றுவித்த பயிற்சியாளர்கள்

விபரத்தை உங்களுக்காக தருகின்றோம்.

1. ட்ரெவர் பெய்லிஸ் (ஆகஸ்ட் 2007 – ஏப்ரல் 2011 வரை )

2. ஸ்டுவர்ட் லோ (மே 2011 – ஜூன் 2011 வரை)

3. ருமேஷ் ரத்னாயக்க (ஜூலை 2011 – ஆகஸ்ட் 2011 வரை)

4. ஜெப் மார்ஷ் (செப்டம்பர் 2011 – ஜனவரி 2012 வரை)

5. கிரகாம் போர்ட் – (ஜனவரி 2012 – டிசம்பர் 2013 வரை)

6. பால் பார்ப்ரஸ் (ஜனவரி 2014 – ஏப்ரல் 2014 வரை)

7. மார்வன் அத்தப்பத்து (ஏப்ரல் 2014 – செப்டம்பர் 2015 வரை )

8. ஜெரோம் ஜயரத்ன (செப்டம்பர் 2015 – டிசம்பர் 2015 வரை)

9. கிரகம் போர்ட் – (ஜனவரி 2016 – ஜூன் 2017 வரை)- 2 வது சந்த்ரப்பம்

10. நிக் போதாஸ் -(ஜூன் 2017 முதல் இன்றுவரை)

11. ஹத்துருசிங்க (2018 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரை)-

இலங்கையின் அடுத்த பயிற்சியாளராவார் எனும் பெரியளவிலான எதிர்பார்பின் அடிப்படையில் ஹத்துருசிங்க 2020 வரை பணியைத் தொடர்வார் என நம்புகின்றோம். 

Comments