அரவிந்த்சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா | தினகரன் வாரமஞ்சரி

அரவிந்த்சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா

அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா இணைந்திருக்கிறார்.

லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு இசையமைத்தவர் அம்ரீஷ். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘ஹர ஹர மகாதேவகி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது இசையில், ‘பொட்டு’, ‘கர்ஜனை’, ‘யங் மங் ஜங்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்கள் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இதில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்தின் பாடல்கள் எதிர்வரும் 30ம் திகதி வெளியாக இருக்கிறது.

தற்போது படத்தின் இசையில் தீவிரம் காண்பித்து வருகிறார் அம்ரீஷ். இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடல் ஒன்றை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்று அம்ரீஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்தை சித்திக் இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இவர்களுடன் 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் நிகிஷா பட்டேல் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசையை டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் இம்மாதம் 30ம் திகதி வெளியிடுகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. 

Comments