மணிரத்னம் மூலம் எனது ஆசை நிறைவேறியது | தினகரன் வாரமஞ்சரி

மணிரத்னம் மூலம் எனது ஆசை நிறைவேறியது

ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ படத்தில் பிரபலமானார். இப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் தற்போது வடசென்னை, துருவ நட்சத்திரம், லக்‌ஷ்மி, இது வேதாளம் சொல்லும் கதை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது சினிமா அனுபவம் பற்றி கூறியதாவது,

“எனக்கு கனவு கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. எனக்கு அமையும் பாத்திரங்கள் அனைத்தையும் கனவு பாத்திரங்களாகவே நினைக்கிறேன்.

புது படங்களை ஒப்புக்கொண்டு முதலில் சில நாட்கள் நடிக்கச் செல்லும் போது எனக்கு பயம் ஏற்படும். தேவையான முகபாவங்களை கொடுக்க முடியுமா என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். என்றாலும் சில நாட்கள் நடித்த பிறகு அந்த பயம் போய்விடும்.

மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. விரைவில் அது நிறைவேற இருக்கிறது. அதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தி பட உலகில் கரன்ஜோஹர் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அது நடந்துவிட்டது. ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனுடன் மீண்டும் பணிபுரிய விரும்புகிறேன்”என்றார். 

Comments