மட்டு. கல்லடி கடற்பகுதியில் கரையொதுங்கும் பாம்புகள் | தினகரன் வாரமஞ்சரி

மட்டு. கல்லடி கடற்பகுதியில் கரையொதுங்கும் பாம்புகள்

புதிய காத்தான்குடி தினகரன், வெல்லாவெளி தினகரன் நிருபர்கள்

 

மட்டக்களப்பு கல்லடி கடல் பகுதியில் மீன்களுக்குப் பதிலாக கரைவலையில் பாம்புகள் பிடிபட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை (02) காலை மட்டக்களப்பு கல்லடி மற்றும் நாவலடி கடல் பகுதிகளில் மீனவர்களின் கரைவலையில் மீன்களுக்கு பதிலாக பாம்புகள் பிடிபட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். கடந்த வருடங்களில் இந்தக் காலப்பகுதியில் கல்லடி பாலத்துக்கு கீழால் பாம்புகள் படையெடுத்ததையும் அதனால் அனர்த்தங்கள் ஏற்படுமோ என மக்கள் அச்சமடைந்ததை போன்ற ஒரு நிலை தற்போது தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வருடங்களாக இவ்வாறான பாம்புகள் மீனவர்களின் கரைவலையில் சிக்குவது வழக்கமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Comments