அனர்த்தம் நேர்ந்ததும் அறிக்ைக ​ெவளியிடுவதில் அர்த்தமே இல்லை | தினகரன் வாரமஞ்சரி

அனர்த்தம் நேர்ந்ததும் அறிக்ைக ​ெவளியிடுவதில் அர்த்தமே இல்லை

விசு கருணாநிதி

ஒக்கிப் புயல் ஓய்ந்துவிட்டது. ஆனால், அது மீண்டும் வரலாம் என்ற மனக்கலக்கம் இன்னும் ஓயவில்லை. மக்கள் மனப்பயத்தைப் போக்குவதற்கான நம்பகமான பொறிமுறையைக் கண்டறிவதற்கு இன்னமும் இயலாமல் இருப்பதே இதற்குக் காரணமாகும்.

இலங்கை மக்களைப் பொறுத்த வரை மண்சரிவிலும்; வெள்ளப்பெருக்கிலும் வருடத்திற்கு ஒரு தடவையேனும் அனுபவப்படுகிறார்கள். ஆனால், புயற்காற்றும் சுனாமியும் நிலநடுக்கமும் புதிய அனுபவமாகவே இன்னும் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இலங்கையிலும் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இயற்கை அனர்த்தம் நிகழும் என்று பல்வேறுவிதமான ஊகங்களும் வதந்திகளும் உலவுகின்றன. இஃது ஊகமா, உண்மையா என்பதை அறிவதுதான் அறிவியலுக்கு ஏற்பட்டுள்ள சவாலாக இருக்கிறது.

பரவலாக உலவும் இந்த வதந்தியை அறிந்து உணர்ந்துகொள்வதில் அதிகாரத்திற்கும் சாமானியத்திற்கும் ஒரு போட்டி நிலையும் உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தில் அரச நிர்வாக இயந்திரத்தை இயக்குபவர்கள் மக்கள் நம்பிக்கை கொள்ளும்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

2004ஆம் ஆண்டில் இலங்கை மக்கள் எதிர்நோக்கிய திடீர் அனர்த்தத்திற்குப் பின்னர் வதந்தியாக இருந்தாலும் மக்கள் தம்மைச் சுதாகரித்துக்ெகாள்வதையே வழக்காக்கிக் ெகாண்டுள்ளனர். என்னதான் அரச அதிகாரிகள் நம்பாதீர்கள், வதந்தி, ஆபத்தில்லை, நாம் தக்க தருணத்தில் அறிவிக்கின்றோம் என்று சொன்னாலும் அதனை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படும் விதத்தில் கால நிலை மாற்றம் நிகழும் என்று உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் பரவி வருவதால், கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் மக்கள் பதற்றத்திற்குள்ளானதை மறந்திருக்கமாட்டீர்கள். அதன் தொடர்ச்சியாகக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒக்கிபுயல் இலங்கையில் நிலைகொண்டிருந்து கடந்திருக்கின்றது.

ஒக்கி புயல் தாக்கும் வரை இலங்கை வானிலை அறிக்ைகயாளர்கள் எந்தவிதமான எச்சரிக்ைகயையும் விடுக்கவில்லை. பயப்பட வேண்டாம் என்று சொல்லி வைத்திருந்தார்கள். எனினும், நடந்தது என்ன? சில மணித்தியாலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்ைகயைப் புரட்டிப்போட்டுவிட்டது புயல். இதுபற்றிய தகவல்களைத் தெரிவித்து மக்களை அறிவுறுத்திய ஊடகங்கள் மீது துறைசார்ந்த அமைச்சர் சீறிப்பாய்கிறார். இது நியாயமா? என்கிறார்கள். உண்மையில் ஊடகங்களுக்குத் தகவல் வழங்குவது யார்? அவ்வாறு வானிலை அவதான நிலையம் பெறும் தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அது வைத்துள்ள பொறிமுறைதான் என்ன? ஊடகத்தைத் தவிர! பிறகு எவ்வாறு ஊடகங்கள் மக்களைக் குழப்ப முடியும்?

அண்மைய தினங்களில் கடும் மழை, மண்சரிவு, வெள்ளம் உட்பட சீரற்ற காலநிலையினால் நாட்டில் 14 மாவட்டங்களில் மொத்தமாக 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

இதுவரை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், குடும்பங்கள் மற்றும் காயமடைந்தோர் உயிரிழந்தோரின் முழுமையான விபரங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.

கடும் காற்று, மண்சரிவு, மழை, வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்திற்கும் அதிகமாகியுள்ளது. 30 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் 8 பேர் காணாமற்போயுள்ளதாகவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தரவுகள்கூடப் பத்திரிகைகளுக்குப் பத்திரிகை ஊடகத்திற்கு ஊடகம் வித்தியாசமாக உள்ளது.

இதேவேளை, 430 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 11,597 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளதுடன் 82 சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்களும் 4 பிரதான உட்கட்டமைப்பு நிர்மாணங்களும் அழிவடைந்துள்ளதாகவும் 28 நலன்புரி முகாம்களில் 3,279 பேர் தற்காலிகமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை, புத்தளம், குருநாகல், கண்டி, நுவரரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களே அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நலன்புரி முகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பதுளை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, நுவரெலியா, அம்பாந்தோட்டை, மாத்தளை, களுத்துறை மாவட்டங்களில் கடந்த 24 மணித்தியாலயங்களில் 100 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மண்சரிவு, கற்களின் சரிவுகள், அணைகள் உடைதல், நிலத்தாழ்வு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் இது தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொது மக்களை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் உதவி தேவைப்படின் தத்தமது பகுதி பிரதேச செயலகங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உண்மையில் அனர்த்த முகாமைத்துவம் என்பது அனர்த்தங்கள் ஏற்பட்டதன் பின்னர் பாதிப்புகள் பற்றிய தரவுகளைப் பேணும் பணியா என்ற கேள்வி எழுகிறது. மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்ைக நடவடிக்ைககளை இந்த நிலையத்தால் மேற்கொள்ள முடியாதா?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ரமணன் என்ற அதிகாரி. அவரிடம், மழை பெய்தால்தானே உங்களுக்கு வேலை இருக்கிறது. மழை இல்லாத காலங்களில் சும்மாதானே இருக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டதற்கு, "மழை, புயல், வெள்ளம் தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்படாவிட்டாலும்கூட, உலகளவில் நடக்கின்ற கால நிலை மாற்றம் குறித்த மதிப்பீடுகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருவோம். அது எமது பணிகளுக்கு உதவியாக இருக்கும்" என்கிறார்.

அதுபோல், அனர்த்த முகாமைத்துவ நிலையம், அனர்த்தங்கள் இல்லாதபோது முன்னெச்சரிக்ைக நடவடிக்ைககள் பற்றி ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறதா? எங்காவது அனர்த்தம் நிகழ்ந்ததன் பின்னர், தகவல் வழங்கும் ஊடகமாக அல்லவா செயற்படுகிறது?! என்பது சாமானிய மக்களின் கேள்வியாக உள்ளது. ஆகவே, தகவல்களைப் பரிமாறும் ஊடகங்கள் மீது குறை சொல்வதைவிடுத்து மக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவது எங்ஙனம் என்பதையே ஆராய வேண்டும்.

புயல்களுக்குப் பெயர் வைத்து அடையாளப்படுத்தும் செயற்றிட்டத்தை 1970ஆம் ஆண்டு அமெரிக்கா ஆரம்பித்தது. 2004இல் இந்தியா தொடங்கியது. அமெரிக்கா வானிலை ஆய்வு மையம் கணிக்கின்ற வானியை ஆய்வுகள் மிகத் துல்லியமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த மையத்தின் கணிப்பின்படிதான் இலங்கையிலும் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனை ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன.

இலங்கை வான்பரப்பை அவதானிப்பதற்கு இந்திய ராடார் கருவிகளைப் பயன்படுத்த நிபுணர்களின் உதவியும் பெறப்பட்டிருக்கிறது. அதுபோல், வானிலை மாற்றத்தைத் துல்லியமாக அறிந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்ைககளை வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகளை நாடுவதில் என்ன தவறிருக்க முடியும்?

தற்போது அந்தமான் தீவருகே நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி எதிர்வரும் நாட்களில் சூறாவளியாக மாறும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இது வடக்கிலும் கிழக்கிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிவித்திருக்கிறது. விசேடமாக டிசம்பர் ஐந்தாம் ஆறாம் திகதிகளில் புயல் தாக்கலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளபோதிலும் எந்தெந்தப் பகுதிகளைத் தாக்கும் என்று துல்லியமாக அறிவிக்கவில்லை.

கிழக்கில் மக்கள் 1978ஆம் ஆண்டின் சூறாவளியின் தாக்கத்தை இன்னமும் மறக்கவில்லை. 2004இல் சுனாமி தாக்கத்திற்குப் பின்னரும்கூடப் புயற்காற்றை மறக்கவில்லை. தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்களின்படி இலங்கையிலும் இந்தியாவிலும் புயற்காற்றும் பூகம்பமும் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. கிழக்கு கடந்த சுனாமி காலத்தைப்போன்று மீனவர்களின் வலைகளில் மீனுக்குப் பதில் பாம்புகள் கிடைத்துள்ளன. அதுவும் ஆழ்கடல் மீன்பிடியின்போது இவ்வாறு பெருந்தொகை பாம்புகள் கிடைத்துள்ளன. இதனைக் கடந்த சுனாமியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது பொதுசனம். ஆனால், விஞ்ஞான ரீதியில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், உண்மை எனின் மக்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கமே உரிய நடவடிக்ைகயை எடுக்க வேண்டும். அப்போதுதான் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும். ஆபத்து நேர்ந்ததும் அறிக்ைககளை வெளியிடுவது வேண்டுமானால், நிவாரணம் வழங்க உதவலாம், உயிர்களைக் காக்க பயன்படாது! 

Comments