இலங்கையில் கால் பதிக்கும் அமிர்தா திரவ பால் நிறுவனம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் கால் பதிக்கும் அமிர்தா திரவ பால் நிறுவனம்

தமிழகத்தைத் தளமாகக் கொண்டுள்ள அமர்தா பால் உற்பத்தி நிறுவனம் வெகு விரைவில் இலங்கையிலும் அதன் கிளையைத் திறக்கவுள்ளது.

இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் ​மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஆர்.மோகனசுந்தரம் அறிவித்துள்ளார்.

நான்கு சொந்த நிறுவனங்களைக் கொண்டுள்ள அமிர்தா நிறுவனம் கிராமிய மட்டத்தில் 650 பால் சேகரிப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு இலட்சம் லீற்றர் பாலை சேகரித்து சந்தைப்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களுள் முதலில் பால் மா மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்வந்துள்ளது. இதற்கென இலங்கை முழுவதிலும் முகவர்களை இந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இலங்கையில் கால் பதிப்பதற்கான முதற்கட்ட வேலைகளை இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அமிர்தா விற்பனை வலையமைப்பில் இணைந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இலங்கை இந்திய தொடர்பாளர் மணவை அசோகனைச் சந்தித்து மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்ெகாள்ள முடியும் என்றும் அமிர்தா நிறுவனத்தின் தலைவர் மோகனசுந்தரம் கேட்டுக்ெகாண்டுள்ளார். (விசு)

Comments