கொழும்பு வந்த பாரிய கப்பல்களில் ஒன்றாக Milan Maersk | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு வந்த பாரிய கப்பல்களில் ஒன்றாக Milan Maersk

உலகின் மிப்பாரிய கப்பல்களில் ஒன்றான Milan Maersk, 2017 அக்டோபர் மாதம் 17 ஆம் திகதியன்று இலங்கை நேரப்படி 1200 மணிக்கு கொழும்பு சர்வதேச கொள்கலன்் முனையத்தினை (CICT) வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தில் இதனைக் கொண்டாடும் முகமாக கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் (CICT) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Milan Maersk இல் விழாவொன்றும் நடத்தப்பட்டது. Maersk குழமத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், துறைமுகங்கள் அதிகாரசபையின் (SLPA),தலைவர் டாக்டர் பராக்கிரம தசநாயக்க, கொழும்பு இன்டெர்நெஷனல் கொண்டெய்னர் டேர்மினல் லிமிடெட்டின் (CICT) தவைர் திரு ரே ரென், ஆகியோாின் பங்கேற்புடன் இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதிமேதகு. அதுல் கேஷ்யப் கலந்து கொண்டார்.

இந்த அதிநவீன மெகா கப்பலானது, Maersk Line இன் இரண்டாம் தலைமுறை Triple-E வகுப்புக்குச் சொந்தமானது. கொழும்பிலிருந்து ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, மற்றும் ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்காக விரைவான கப்பற்போக்குவரத்தினையும் வழங்குவது இது.

அத்துடன் சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்தான அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களையும் இலங்கைச் சந்தைக்குக் கொண்டு வருகிறது.

இந்த வரலாற்று முக்கியத்துவம்மிக்க நிகழ்வு பற்றி AP Moller Maersk இன் தெற்சாசிய குழும விவகாரங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் ஜுலியன் மைக்கல் பேவிஸ் குறிப்பிடுகையில் “எங்களுக்கு இதுவொரு மிகுந்த பெருமை தரும் தருணம். இந்நிகழ்வானது Maersk குழமத்தின், கொள்கலன் கப்பற்போக்குவரத்துத் துறையிலும், சர்வதேச வர்த்தகத்திலும் உள்ள அர்ப்பணிப்பினைக் காட்டுகின்றது. எங்கள் வாடிக்கையார்களைத் திருப்திப்படுத்துவதற்காக நாங்கள் சர்வதேச கப்பற் போக்குவரத்தில் உள்ள எல்லைகளைக் கடந்து செயற்படக் கூடியதாகவிருக்கும்.”

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் (SLPA), டாக்டர் பராக்கிரம தசநாயக்க, கொழும்புத் துறைமுகத்தில் தங்களது பாரிய கப்பல்களில் ஒன்றினை தரித்துநிற்க முடிவெடுத்தமைக்காக Maersk Line நிறுவனத்துக்கு பாராட்டுத் தெரிவித்தார். Maersk போன்ற நிறுவனங்கள் காட்டும் நம்பிக்கையும், விசுவாசமும், ஆதரவுமே கொழும்பு துறைமுகத்தினை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வதாகத் தெரிவித்தார். 

Comments