யுனிலீவர் அறிமுகப்படுத்தியுள்ள Surf Excel Matic Liquid | தினகரன் வாரமஞ்சரி

யுனிலீவர் அறிமுகப்படுத்தியுள்ள Surf Excel Matic Liquid

சலவை சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி யுனிலீவர் ஸ்ரீ லங்கா தலைமைத்துவத்தை தொடர்ந்தும் உறுதிசெய்துள்ளது.

சலவை சந்தையில், முக்கால் பகுதியை தன்வசம் கொண்டுள்ள யுனிலீவர் ஸ்ரீ லங்கா, மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கமைய புத்தாக்கமான தீர்வுகளை அறிமுகம் செய்வதனுௗடாக, சலவை சந்தையில் தொடர்ச்சியாக முன்னோடியாக திகழ்கிறது. 1900ம் ஆண்டுகளின் முற்பகுதியில், சன்லைட் சவர்க்காரத்தின் அறிமுகத்துடன் இலங்கையில் வர்த்தகநாம சலவை சந்தையை யுனிலீவர் உருவாக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆடைகளை சலவை செய்வதை இலகுவாக்கும் வகையில் 1960ல், ரின்சோ வர்த்தக நாமத்தில் சலவை பவுடரை அறிமுகம் செய்திருந்தது. நுகர்வோரின் வெவ்வேறு சலவை தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, Surf Excel மற்றும் சன்லைட் டிடர்ஜன்ட் பவுடரை அறிமுகம் செய்திருந்தது. சலவை சந்தையில் மற்றுமொரு புரட்சியை உருவாக்கும் வண்ணம், யுனிலீவர் தற்போது இலங்கை பாவனையாளர்களுக்கு Surf Excel Matic Liquid ஐ அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த யுனிலீவர் ஸ்ரீ லங்கா ஹோம்கெயார் (Homecare) பிரிவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஷமாரா சில்வா பெரேரா, எமது நுகர்வோர் முன்னேறி வருவதுடன், அவர்களின் வாழ்க்கை வேலைப்பளு நிறைந்ததாக மாறியுள்ளது. இந்த வேலைப்பளு நிறைந்த வாழ்க்கையில் தமது ஆடைகளை சலவை செய்துகொள்வதற்கு பல வாடிக்கையாளர்கள் சலவை இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், பெருமளவான சலவை பவுடர்கள் சலவை இயந்திரத்தில் சலவைத்தூளை ஆடைகளில் படியச்செய்வதுடன், அழுக்குகளையும், கடும் கறைகளையும் அகற்றுவதில்லை. இதன் காரணமாக இரண்டாவது தடவையும் ஆடைகளை கைளால் கழுவ வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த தேவையை புரிந்துகொண்டு Surf Excel Matic Liquid ஐ அறிமுகம் செய்கிறோம்.​

Comments