என்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா?- | தினகரன் வாரமஞ்சரி

என்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா?-

துருக்கியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியின்போது ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவை நோக்கி ரசிகர் ஒருவர் என்னை திருமணம் கொள்வீர்களா? என்று கேட்டதற்கு அவரது ரியாக்சனைப் பார்ப்போம்.

ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. உலகளவில கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். டென்னிஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லம் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 15 மாதம் தடைவிதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து தற்போது சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் கிராண்ட்ஸ்லம் தொடருக்கு தயாராகி வரும் மரியா ஷரபோவா, துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற காட்சி போட்டியொன்றில் உள்ளூர் வீராங்கனையான காக்லா புயுாக்கேய்-ஐ எதிர்கொண்டார்.

இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மரியா ஷரபோவாவை நோக்கி ரசிகர் ஒருவர் ‘‘மரியா, என்னைக் கல்யாணம் செய்துக் கொள்வீர்களா? (Maria, will you marry me?) என்று கத்தினார்.

ரசிகரின் குரல் ஷரபோவாவின் காதை எட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷரபோவா சர்வீசை நிறுத்தி, தனது ரியாக்சனை வெளிப்படுத்தினார். அப்போது அந்த ரசிகர் நோக்கி ‘Maybe’ என்றார். 

Comments