மஹிந்த அணிக்கு 10 நிமிடங்கள் வழங்கியது ஆளும் தரப்பு | தினகரன் வாரமஞ்சரி

மஹிந்த அணிக்கு 10 நிமிடங்கள் வழங்கியது ஆளும் தரப்பு

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

 

ஆளும் கட்சியின் 10 நிமிடங்கள் கூட்டு எதிர்க்கட்சியான மஹிந்த அணிக்கு நேற்று விவாதத்திற்காக வழங்கப்பட்டது. கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தன நேற்றைய குழு நிலை விவாதத்தில் உரையாற்றி

கொண்டிருந்தபோது அவரது நேரம் முடிவடைந்ததால் ஆளும் கட்சி எம்.பி.ரவி கருணாநாயக்கவின் 15 நிமிட நேரத்திலிருந்து 10 நிமிடங்கள் தினேஷ் எம்.பிக்கு வழங்கப்பட்டன. பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த தினேஷ் குணவர்தன எம்.பி. உரையாற்றினார். வரவு செலவுத் திட்டத்தை நீலப்பசுமை ‘பியர்’ வரவு செலவுத் திட்டம் என அவர் இதன் போது வர்ணித்தார்.

இதன்போது அவருக்கான நேரம் நிறைவு பெற்றுவிட்டதாக சபைக்குத் தலைமைதாங்கிய ஜே.வி.பி.எம்.பி விமல் ரத்நாயக்க அறிவுறுத்தினார். தமக்கு மேலதிக நேரத்தை வழங்குமாறு குணவர்தன தினேஷ் எம்.பி கோரியபோது தமக்கான நேரத்தில் 10 நிமிடங்களை வழங்குவதாக ரவி கருணாநாயக்க எம்.பி தெரிவித்தார். இதனையடுத்து மேலதிகமாக 10 நிமிடம் தினேஷ் எம்.பிக்கு வழங்கப்பட்டது.(ஸ) 

Comments