24 Megapixel Selfie-Shooter Vivo V7 இலங்கையில் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

24 Megapixel Selfie-Shooter Vivo V7 இலங்கையில் அறிமுகம்

வேகமாக வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் வர்த்தகநாமமான Vivo,தனது புதிய V- தெரிவு அறிமுகமான V7ஐ கொழும்பில் அறிமுகம் செய்துள்ளது. 24MP முன்புற ​ெகமரா மற்றும் FullViewTM டிஸ்பிளே ஆகிய புரட்சிகரமான தொழில்நுட்பங்களை கொண்டமைந்த V7, Vivoவின் selfie-shooter தெரிவுகளில் புதிய உள்ளடக்கமாக அமைந்துள்ளது. இதன் புகைப்பட உள்ளம்சங்கள், திரையின் தரம் மற்றும் தயாரிப்பின் வடிவமைப்புபோன்றன மிகச் சிறந்தனவாக காணப்படுகின்றன.

இலங்கையின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் அண்மையில் பிரவேசித்திருந்த Vivo,தொடர்ச்சியாக சர்வதேசமட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்த்த வண்ணமுள்ளது. புத்தாக்கமான, அடுத்த தலைமுறை சாதனங்களினூடாக வாடிக்கையாளர்களுக்கு உயர் மாற்றம்சங்கள் படைத்த ஓடியோ வீடியோ அனுபவங்களை வழங்கிய வண்ணமுள்ளது.

சிறந்த selfieக்காக தோற்றமளிப்பது வினைத்திறன் வாய்ந்த 24MP முன்புற ​ெகமராவினூடாக, selfieகளில் தனது தலைமைத்துவத்தை Vivo உறுதிசெய்துள்ளது. எவ்வேளையிலும், எங்கிருந்தும் மிகச்சிறந்த selfieகளை பாவனையாளர்களுக்கு நிஜ வர்ணங்களில் எடுத்துக்கொள்ள உதவியாக அமைந்துள்ளது.

V7 இல் ஸ்மார்ட் புகைப்பட அம்சங்கள் மற்றும் மேலதிக உள்ளம்சங்களான Face Beauty 7.0 போன்றன உள்ளடங்கியுள்ளன. இதனூடாக மிகச்சிறந் தரம், இயற்கையாக தோற்றமளிக்கும் selfieகள், ஒளிகுறைந்த பகுதியிலும் பிரகாசத்தன்மை போன்றவற்றை பெற்றுக்கொள்ளமுடியும். V7ன் Portrait Mode இனால் தெளிவானதோற்றஅமைப்புகளை பெற்றுக்கொள்ள முடியும், இது நிபுணத்துவம் வாய்ந்த புகைப்பட அம்சங்களுடன் போட்டியிடக்கூடியது. அதுபோன்று16MP பின்புற ​ெகமராவும் Live Photo தெரிவுக்கு உதவியாக அமைந்துள்ளது. அர்த்தமுள்ள காட்சி அனுபவங்களுக்கு 18:9 விகித FullViewTM டிஸ்பிளே V7 ல் 18:9 விகித FullViewTM5.7-inch டிஸ்பிளே திரை காணப்படுகிறது. இதனூடாக பாரம்பரிய16:9 திரைகளுடன் ஒப்பிடுகையில் 12.5% மேலதிக காட்சியை பார்க்கக்கூடியதாக இருக்கும். இதனூடாகவாசிப்பது, இணையத்தை பார்வையிடுவதுமற்றும் தேசப்படங்கள் பார்வையிடுவது போன்றன இலகுவானதாகவும், அதிகளவு வினைத்திறன் வாய்ந்ததாகவும் காணப்படுகிறது.

83.6 % திரை-உடல் விகிதாசாரத்தினூடாகV7கேமிங் செயற்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. இதில் காணப்படும் உள்வைக்கப்பட்ட கேமிங் அம்சத்தினூடாக, No Notifications மற்றும் Floating Call Alerts போன்ற தடையில்லாதகேமிங் அனுபவத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

உள்ளம்சங்கள் பொருந்தி OS மற்றும் மிகச்சிறந்த வினைத்திறன் V7ல் 64-bit Qualcomm octa-core CPUமற்றும் 4GB RAM ஆகியன காணப்படுகின்றன. இவை மிருதுவான மற்றும் ஒப்பற்ற பாவனையாளர் அனுபவத்தை வழங்கக்கூடியன. 

Comments