இலங்கை-−இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து... | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை-−இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து...

* டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொடர் வெற்றிகளைப்பெற்ற அணியாக இங்கிலாந்து, அவுஸ்திரேலிய ஆகிய அணிகளுடன் கடந்தவாரம் முடிவுற்ற இலங்கை அணியுடனான தொடர் வெற்றியின் மூலம் இந்திய அணியும் இணைந்து கொண்டது.

இங்கிலாந்து ஆரம்ப காலங்களில் 1884 முதல் 1892 வரையபன காலப் பகுதியில் 9 டெஸ்ட் தொடர்களில் தொடச்சியாக வெற்றிபெற்றிருந்தது. இதே போல் அவுஸ்திரேலிய அணியும் 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 டெஸ்ட் போடடித் தொடர்களில் வெற்றிபெற்றிருந்தது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை 2 -1, தென்னாபிரிக்கா 3- 0, 2016ம் ஆண்டு மேற்கிந்தித் தீவுகள் 2- 0, நியூசிலாந்து 3- 0, இங்கிலாந்து 4-0, 2017 ஆம் ஆண்டு பங்களாதேஷ் 1- 0, அவுஸ்திரேலியா 2-1, இலங்கை 3- 0, மீண்டும் இலங்கை 1-0 என தொடர்து 9 தொடர்களில் வெற்றிபெற்று மேற்படி சாதனையை சமன் செய்துள்ளது.

* இலங்கை- இந்திய டெஸ்ட் தொடரில் இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமால் இவ்வாண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறை 300 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு அரிய சாதனை படைத்துள்ளார். இவர் இவ்வருட ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணியுடனான எஸ் எஸ். சி. போட்டியில் 300 பந்துகளை சந்தித்து சதமடித்தார். மீண்டும் அபுதாபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 372 பந்துகளை சந்தித்து 155 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து கடந்தவாரம் முடிவுற்ற இந்தியாவுடன் டில்லி டெஸ்டிலும் 361 பந்துகளைச் சந்தித்து 164 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவ்வாண்டு இந்திய வீரர் புஜாராவும் மூன்று முறை 250 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்திய- இலங்கை அணிகளுக்கிடையிலான டில்லியில் நடைபெற்ற போட்டியில் காற்று மாசடைந்ததன் காரணமாக 140 வருட டெஸ்ட் வரலாற்றில் முதன் முதலாக வீரர்கள் மாஸ் அணிந்து களத்தடுப்பில் ஈடுபட்டனர். பாசடைந்த காற்றினால் போட்டி அடிக்கடி தடைப்பட்டது. இதனால் கடுப்பான இந்திய அணித் தலைவர் கோஹ்லி உடனே முதலாவது இனிங்ஸை டிக்ளே செய்தார். நிர்ப்பந்தத்தின் காரணமாக டிக்ளே செய்த இரண்டாவது தடவை இதுவாகும். இதற்கு முன்பு 1976ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 97 ஓட்டங்கள் பெற்றிருந்த போது அப்போதைய வேகப்பந்து விச்சாளர்களான மைக்ல் ஹோல்டி, அன்டி றோபட் ஆக்ரோஷமாக பந்து வீசினார்கள். எனவே தனது வீரர்கள் காயமடையக் கூடும் என்ற நிர்ப்பந்தத்தில் அப்போதைய தலைவர் பிஷப் சிங் பேடி டிக்ளே செய்தார்.

* டெல்லி டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி 243 ஓட்டங்கள் பெற்றார். இது விராட் கோஹ்லி டெஸ்ட் அரங்கில் பெற்ற கூடிய ஓட்டமாகும். கோஹ்லி பெற்ற இரட்டை சதமானது அவர் பெற்ற ஆறாவது இரட்டை சதமாகும். இதுவரை அணித்தலைவராக இருந்து கூடிய இரட்டை சதமடித்த மேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவர் பிரயன் லாராவின் சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார். லாரா 5 இரட்டைச்சதங்கள் அடித்திருந்தார்.

* இலங்கை அணியின் சழற்பந்து வீச்சாளர் டில்ருவன் பெரேரா இலங்கை சார்பாக குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களைக் கைப்பற்றிய சாதனையைப் புரிந்துள்ளார். இவர் டில்லியில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஷிகர் தவானின் விக்கெட்டை வீழ்த்தி தனது 25 போட்டியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

* இவ்வருட ஆரம்த்தில் விரைவாக 260 விக்கெட்டை வீழத்திய அவுஸ்திரேலிய வீரர் டெனிஸ் லிலியின் சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முறியடித்திருந்தார். மீண்டும் அவர் கடந்த வாரம் முடிவுற்ற இந்திய- இலங்கை டெஸ்ட் தொடரின் போது விரைவாக 300 விக்கெட் என்ற லிலியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

டெனிஸ் லிலி 58 போட்டிகளில் படைதத சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் 54 போட்டிகளிலேயே முறியடித்துள்ளார். 

Comments