உலகக் கிண்ண உதைபந்தாட்டம்:முதற்சுற்றுப் போட்டிகளுக்கான டிக்கட்டுக்கள் விற்பனை | தினகரன் வாரமஞ்சரி

உலகக் கிண்ண உதைபந்தாட்டம்:முதற்சுற்றுப் போட்டிகளுக்கான டிக்கட்டுக்கள் விற்பனை

அடுத்த வருடம் ஜூன் மாதம் ரஷ்யாவின் நடைபெறவிருக்கும் பீபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. ரஷ்யாவில் 11 நகரங்களிலுள்ள 12 மைதானங்களில் இறுதிப் போட்டியுடன் 64 போட்டிகள் நடைபெறவுள்ள இவ்வுலகக் கிண்ணத் தொடருக்காக 2 மில்லியன் டிக்கட்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதுவரை கடந்த செப்டம்பர் 14ம் திகதி முதல் அக்டோபர் 28ம் திகதி வரை முதற்கட்டமாக முதற்சசுற்றுப் போட்டிகளைக் காண 742,760 டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்முறை மொத்த டிக்கெட்டுகளின் பெரும் பகுதியை போட்டியை நடாத்தும் ரஷ்ய நாட்டு ரசிகர்களே விண்ணப்பித்துள்ளனர். 47 சத வீதமே ஏனைய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டம் கட்ட டிக்கெட் விற்பனை எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டியில் மொஸ்கோ நகர மைதானத்தில் 2018 ஜுன் மாதம் 14ம் திகதி ரஷ்யா விளையாட்டும் ஆரம்பப் போட்டிக்கான டிக்கெட்டின் கட்டணமாக 414 ஸ்ரேன்லிங் பவுண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு நடைபெற்றவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான டிக்கட்கள் முதற் சுற்று, 2ம் சுற்று, அறையிறுதி, மூன்றாமிடம். இறுதி போட்டி என போட்டிக்குப் போட்டி டிக்கெட்டுகளின் கட்டணம் வேறுபடுகின்றன. போட்டியை நடத்தும் ரஷ்ய நாட்டு ரசிகர்களுக்காக சகாய விலையில் டிக்கெட்டுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் முதற் சு்றறு ஆட்டங்களுக்கு முதல் வகுப்பு ஆசனங்களுக்கான கட்டணமாக 158 பவுண்களும், 2ம் வகுபபு ஆசனங்களுக்கு 124 பவுண்களும், மூன்றாம் வகுப்பு ஆசனங்களுக்கு 79 பவுண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் ரஷ்ய நாட்டு ரசிகர்களுக்கு முதல் வகுபபு ஆசனங்களுக்கு 17 பவுண்களே அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் கால்பந்தாட்ட இறுதி ஆட்டத்துக்கான டிக்கெட் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றிலேயே ஆகக்கூடிய கட்டணமாக 829 பவுண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டியைக் காண அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, சீனா, மெக்ஸிகோ, இஸ்ரேல், ஆஜன்டீனா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அகிய நாடுகளிலிருந்தே அதிக பார்வையாளர் டிக்கட்டுக்காக விண்ணப்பித்துள்ளாதாக செயதிகள் தெரிவிக்கின்றன.

ஒன்லைன் மூலமும் உலகக் கிண்ண நுழைவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களும் வந்தவண்ணமுள்ளதாக அறியக் கிடைக்கிறது

உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பதாகையும் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 1954ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை ரஷ்ய அணியின் கோல் காப்பாளராக இருந்து சிறந்த சேவை செய்த லெவ் யசீனின் உருவப்படத்துடன் கூடிய பதாகை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. ரஷ்ய அணிக்காக சிறந்த சேவை செய்துள்ள இவர் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதையும் பெற்றுள்ளார். ரஷ்யாவின் கலைத்துவத்தையும், ரஷ்யா கல்பந்தாட்டத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் முகமாக இப்பதைகயை வெளியிட்டுள்ளது.

2018ம் ஆண்டு பீபா கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான ஆசனப்பிரிவுகளும் டிக்கட்டின் விலைகளும் வருமாறு-

 

குறிப்பு:- ப – ஸ்டேன்லிங் பவுண்

2018 ஜூன் 14ல் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள பீபா உதைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் 32 நாட்டு அணிகள் மோதுகின்றன. 32 அணிகளை ஒரு குழுவில் 8 அணிகள் இடம்பெறும் வகையில் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்முறை ஒவ்வொரு குழுவிலும இடம்பெறும் நாடுகள் வருமாறு:- 

Comments