தங்கப்பந்து விருது: 5-வது முறையாக வென்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ | தினகரன் வாரமஞ்சரி

தங்கப்பந்து விருது: 5-வது முறையாக வென்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ

தங்கப்பந்து என்று அழைக்கப்படும் 'பலோன் டி'ஆர்' விருதை ஐந்தாவது முறையாக வென்று மெஸ்சியின் சாதனையை ரொனால்டோ சமன் செய்தார்.சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்குஇ பிரான்ஸ் கால்பந்து மேகசின் சார்பில் ஆண்டுதோறும் பிபா தங்கப்பந்து என்றழைக்கப்படும் 'பலோன் டி'ஆர்' விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான வீரர் பத்திரிகையாளர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டிற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் மெஸ்சிஇ கிறிஸ்டியானோ ரொனால்டோஇ நெய்மர் உட்பட 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்இ இடம்பிடித்துள்ளனர்.

மெஸ்சி ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை இந்த விருதை பெற்றுள்ளார். ரியல் மட்ரிட் அணி இந்த ஆண்டு லா லிகாஇ சம்பியன் லீக் டைட்டிலை வென்றுள்ளது.

இதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ரொனால்டோ இந்த ஆண்டிற்கான விருதை பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்வார் என கூறப்பட்டு வந்தது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகரான பாரிசில் நேற்று நடைபெற்றது. அப்போது இந்த ஆண்டிற்கான பலோன் டி'ஆர் விருது கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் ஐந்தாவது முறையாக இந்த விருதை வென்ற ரொனால்டோ மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்.

அடுத்த இடத்தை லியோனல் மெஸ்சியும்இ மூன்றாவது இடத்தை நெய்மரும் பிடித்தனர். கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட பலோன் டி'ஆர் விருதை மெஸ்சியும்இ ரொனால்டோவும் மாறி மாறி வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போர்த்துக்கல் அணியின் தலைவரான ரொனால்டோஇஆர்ஜண்டீனா அணியின் தலைவரான மெஸ்ஸி ஆகியோருக்கிடையில் விருதுக்கு கடுமையான போட்டி நிலவியது.

இறுதியில் 5 வது தடவையாக ரொனால்டோ விருதை தனதாக்கியுள்ளார்.

2008 - ரொனால்டோ

2009 – மெஸ்ஸி

2010 – மெஸ்ஸி

2011 – மெஸ்ஸி

2012 – மெஸ்ஸி

2013 – ரொனால்டோ

2014 – ரொனால்டோ

2015 – மெஸ்ஸி

2016 – ரொனால்டோ

2017 – ரொனால்டோ

2013 -2017 வரையான காலப்பகுதியில் ரொனால்டோ 4 தடவைகளும் இமெஸ்ஸி ஒரு தடவையும் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றுள்ளனர்.

Comments