நம்பிக்கை! | தினகரன் வாரமஞ்சரி

நம்பிக்கை!

என் இமைகளுக்குள்

பதுங்கிக் கொண்ட

பனித்துளிகள்

என் உணர்வுகளுக்குள்

உறைந்து போன

உயிர் வலிகள்...

என் வாழ்நாட்களை

விதையாக்க நினைத்த

உறுதிபூனல்கள்...

என் உலகை

இனிமையாக்கும்

இனிய நேசங்கள்...

அடுத்த நிமிடம்

என்னவென்று அறியாத

இந்த சுவாரஸ்யங்கள்....

இந்த நாளும்

ஏதோ சேதி

சொல்லப் போகிறது

என விடியும்

அதிகாலைகள்....

எனக்குள் எதையோ

தேடிப் பார்க்கச்

சொல்கிறது!

இதமாகும்

அத்தனை

கண(ன)ங்களும்...

இந்த நம்பிக்கைதான்

என் தேடல்களின்

தலை வருடல்...! 

Comments