பாலா இயக்கத்தில் | தினகரன் வாரமஞ்சரி

பாலா இயக்கத்தில்

தாரை தப்பட்டை படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஜோதிகா பேசிய வசனம் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தையடுத்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான, அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை எடுக்க இருக்கிறார் பாலா. இதில் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் முதல் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், பாலா இயக்கும் படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத், நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அனுஷ்கா போன்ற நட்சத்திரங்களை இணைத்து பாலா படம் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. அந்தப் படத்தில் விக்ரம் வேதா புகழ் ஷரத்தா ஸ்ரீநாத்தும் நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள். 

Comments