மொரகஹகந்தை நீர்த்தேக்கம் இன்று ஜனாதிபதியால் திறப்பு | தினகரன் வாரமஞ்சரி

மொரகஹகந்தை நீர்த்தேக்கம் இன்று ஜனாதிபதியால் திறப்பு

மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் நாளை (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் கட்டிமுடிக்கப்பட்ட நீர்த்தேக்கத் திட்டத்தின் நீரை ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக நீர்ப்பாசனத்துக்காக திறந்து விடவுள்ளார்.

வடமத்திய, வடமேல்,கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இதன் மூலம் நன்மை கிடைக்கவுள்ளது. பராக்கிரம சமுத்திரத்தை விட நான்கு மடங்கு விசாலமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் சுமார் 4 இலட்சம் விளைநிலங்களில் செய்கை பண்ண முடியும். இதன் மூலம் நாட்டிற்கு சுமார் 5,000 மில்லியன் ரூபா வரையில் இலாபமீட்ட முடியும் என திட்ட பணிப்பாளர் ரி.பி. விஜேரத்ன தெரிவித்தார்.

நீர்த்தேக்கம் திறக்கப்படும் தினத்தில் மாலை 3 மணிக்கு மஹாவலி திட்டத்தின் நீர்த்தேக்க நிர்மாண நினைவு வைபவம் பொல்கொல்ல நீர்த்தேக்க அணைக்கட்டில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சுமார் 10 இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவுள்ளதுடன், நன்னீர் மீன்பிடித்தொழிற்றுரையும் இதன் மூலம் மேம்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 25 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. அத்துடன் இதன் மூலம் 2,000 பெரிய மற்றும் சிறிய குளங்கள் போஷிக்கப்படவுள்ளதுடன், 6 மாவட்டங்களில் சுமார் 15 இலட்சம் மக்கள் நன்மை பெறவுள்ளனர்.

நீர்த்தேக்கத் திட்டத்தின் நீரை ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக நீர்ப்பாசனத்துக்காக திறந்து விடவுள்ளார்.

வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இதன் மூலம் நன்மை கிடைக்கவுள்ளது. பராக்கிரம சமுத்திரத்தை விட நான்கு மடங்கு விசாலமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் சுமார் 4 இலட்சம் விளைநிலங்களில் செய்கை பண்ண முடியும். இதன் மூலம் நாட்டிற்கு சுமார் 5000 மில்லியன் ரூபா வரையில் இலாபமீட்ட முடியும் என திட்ட பணிப்பாளர் ரி.பி. விஜேரத்ன தெரிவித்தார்.

நீர்த்தேக்கம் திறக்கப்படும் தினத்தில் மாலை 3 மணிக்கு மஹாவலி திட்டத்தின் நீர்த்தேக்க நிர்மாண நினைவு வைபவம் பொல்கொல்ல நீர்த்தேக்க அணைக்கட்டில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சுமார் 10 இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவுள்ளதுடன், நன்னீர் மீன்பிடித்தொழிற்றுரையும் இதன் மூலம் மேம்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 25 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. அத்துடன் இதன் மூலம் 2000 பெரிய, சிறிய குளங்கள் போஷிக்கப்படவுள்ளதுடன், 6 மாவட்டங்களில் சுமார் 15 இலட்சம் மக்கள் நன்மை பெறவுள்ளனர். (ஹெச்.ஆர்) 

Comments