இரண்டு தங்க விருதுகளை சுவீகரித்துள்ள | தினகரன் வாரமஞ்சரி

இரண்டு தங்க விருதுகளை சுவீகரித்துள்ள

ஹேலீஸ் பீ.எல்.சீ இன் விவசாய வணிகப்பிரிவான ஹேலீஸ் அக்ரிகல்சர் ஹோல்டிங்ஸ்(Hayley’s Agriculture Holdings) அண்மையில் நடைபெற்ற தேசிய வா்த்தக சிறப்பு விருதுகள்-2017’ (National Business Excellence Awards 2017) (NBEA) இல் இலங்கையில் அதன் புத்தாக்கமான விவசாய வணிக நடவடிக்கைகளுக்காக இரண்டு தங்க விருதுகளைப் பெற்றுள்ளது.

ஹேலீஸ் அக்ரிகல்சாின் முன்னோடி ஹைபிரிட்(Hybrid) மலர் விதை உற்பத்தி நிறுவனமான குவாலிட்டி சீட் கம்பனி பிரைவட் லிமிெடட் (Quality Seed Co. (Pvt) Limited) நிறுவனம், நடுத்தர அளவு நிறுவனங்களுக்கான பிாிவில் தங்க விருதைப் பெற்ற அதேநேரம், சிறியளவிலான நிறுவனங்களுக்கான பிரிவில், இத்துறையில் டிஷூ கலாசார ஆய்வு கூடமான(Tissue Culture Laboratory) ஹேலீஸ் அக்ரோ பயோடெக் பிரைவட் லிமிடட்(Hayleys Agro Biotech (Pvt) Limited) நிறுவனமும் தங்க விருதைப் பெற்றுள்ளது.

ஹேலீஸ் பீ.எல்.சீ இன் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாாியும், ஹேலீஸ் அக்ரிகல்சர் ஹோல்டிங்ஸ் லிமிடட்டின் தலைவருமான மொஹான் பண்டித்தகே, தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள்-2017 போன்ற பெருமைக்குரியதொரு விருது வழங்கல் விழாவில் எமது புத்தாக்கமான திறன்களுக்காக கிடைத்திருக்கும் அங்கீகாரமானது, இலங்கையின் பல்வேறு வேளாண்மைத் துறைகளையும் முன்னேற்றுவதற்காக ஹேலீஸ் அக்ரிகல்சர் முன்னெடுத்து வரும் முன்னோடியான பங்களிப்பிற்கு மேலும் வலு சேர்க்கிறது. இந்நிலையில் ஹேலீஸ் அக்ரிகல்சாின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும் பங்காற்றி வரும் எமது பணியாளர்கள் குழுவிற்கும் சிரேஷ்ட முகாமைத்துவத்தினருக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

ஹேலீஸ் அக்ரிகல்சரின் பலம் வாய்ந்த விடயம் யாதெனில், நாடளாவிய ரீதியிலுள்ள பங்குதாரா்களுடன் இணைந்து, கிராமப்புறங்களில் ஏற்கனவே விவசாயத்துத்துறையில் ஈடுபட்டுள்ள சமூகம் தொடர்பில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி வருவதாகும். ஹேலீஸ் அக்ரிகல்சர், பங்குதாரர்களுடன் வலையமைப்பை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் விவசாயத்துறையில் நெகிழ்வான, நிலையான மற்றும் இலாபகரமான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை ஊக்குவிக்கும் ஒரு அலைவரிசையை ஆரம்பித்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

Comments