2017 கண்காட்சியில் கந்துரட்ட காட்சித்திடலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன | தினகரன் வாரமஞ்சரி

2017 கண்காட்சியில் கந்துரட்ட காட்சித்திடலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“ஷில்ப அபிமானி -2017” சர்வதேச கைவினைப்பொருட் கண்காட்சியானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைவினைப் பொருட்கள் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ‘ஷில்ப அபிமானி – 2017’ கண்காட்சியின் உத்தியோகபூர்வ குடை அனுசரணையாளர்களாக இலங்கையின் முன்னணி குடை உற்பத்தியாளர்களான வரையறுக்கப்பட்ட கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்ரீஸ் தனியார் நிறுவனம், இருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கலாசார பாரம்பரியங்களை பேணும்வகையில் இக்கண்காட்சி ஒழுங்குசெய்யபட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கந்துரட்ட கண்காட்சித்திடலுக்கு வருகைதந்திருந்தார். அப்போது அவருக்கு பிரத்தியேமாக வடிவமைக்கப்பட்ட ‘ஷில்ப அபிமானி’ மற்றும்’ கந்துரட்ட’ இலட்சினைகள் பொறிக்கப்பட்ட குடை வரையறுக்கப்பட்ட கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்ரீஸ் தனியார் நிறுவனத்தலைவர் எம்.ரீ.எம் நெளஷாத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வரையறுக்கப்பட்ட கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்ரீஸ் தனியார் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ரீ.எம் நெளபல், மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் ரீஸா தாஹிர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். 

Comments